சென்னை: தொடர்ந்து பெய்து வந்த கனமழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. இந்நிலையில் பல்வேறு கட்சியினரும் மக்களை சந்தித்து குறைகள் கேட்டறிவது, நிவாரண பொருள்கள் வழங்குவது எனச் செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அம்பத்தூர் அருகே மத்திய இணையமைச்சர் எல். முருகன் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த பின்னர் மக்களுக்கு நிவாரண பொருள்கள் வழங்கிவிட்டு மக்களிடம் குறைகள் கேட்காமல் சென்று விட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் பாஜகவினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல் துறையினர் தலையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
இதையும் படிங்க: திருவாரூரில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஸ்டாலின் ஆய்வு