ETV Bharat / city

மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் இரங்கல் - Details of the victims of the electric shock in Tamil Nadu

சென்னை: மின்சாரம் தாக்கி உயிரிழந்த எட்டு நபர்களின் குடும்பங்களுக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் இரங்கல்

author img

By

Published : Nov 8, 2020, 1:10 PM IST

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து முதலமைச்சர் பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "தூத்துக்குடி மாவட்டம், நடந்தான்குளம் கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன், விவசாய நிலத்தில் நீர் பாய்ச்சும் போது, மின்சாரம் தாக்கி உயிரிழந்த செய்தியையும், கோவில்பட்டி வட்டம் சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த பாண்டி என்பவரின் மகன் சந்தியாகு விளையாடிக் கொண்டிருந்த போது வீட்டில் தொங்கிக்கொண்டிருந்த மின் வயரை தொட்டதில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த செய்தியையும்,

புதுக்கோட்டை மாவட்டம், தென்மழையூர் பகுதியைச் சேர்ந்த கருப்பையா என்பவர் விவசாய நிலத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில், மின்சாரம் தாக்கி உயிரிழந்த செய்தியையும், திருவள்ளூர் மாவட்டம், அண்ணாமலைச்சேரி கிராமத்தைச் சேர்ந்த தாஸ் என்பரின் மகன் சுரேன் என்பவர் விளையாடிக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்த செய்தியையும், அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

நடமாடும் அம்மா உணவக வாகனங்கள்: முதலமைச்சர் பழனிசாமி தொடங்கிவைப்பு

மேலும், "கன்னியாகுமரி மாவட்டம், மிடாலம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயசேகர் என்பவர் கட்டடப் பணியின் போது, மின்சாரம் தாக்கி உயிரிழந்த செய்தியையும், சென்னை, திருவொற்றியூரைச் சேர்ந்த சுரேன் என்பவர் லாரியில் மூட்டைகளை ஏற்றும் பணியின்போது, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், பள்ளிக்கரணையைச் சேர்ந்த பாபு என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த செய்தியையும்,

விருதுநகர் மாவட்டம், சுண்டங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது மின் கம்பி அறுந்து விழுந்து, மின்சாரம் தாக்கி உயிரிழந்த செய்தியையும் அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்" என்று குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து, "மின்சாரம் தாக்கி உயிரிழந்த எட்டு நபர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவர்களின் குடும்பங்களுக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்" என்று கூறியிருந்தார்.

கரோனா விழிப்புணர்வு வாகனங்கள் - முதலமைச்சர் துவக்கிவைப்பு!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.