ETV Bharat / city

விநாயகர் சிலைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட 177 பேர் மீது வழக்குப்பதிவு - விநாயகர் சதுர்த்தி

தமிழ்நாடு அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கலைவாணர் அரங்கம் முன்பு, விநாயகர் சிலைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட 177 பேர் மீது திருவல்லிக்கேணி காவல் துறை 5 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தது.

விநாயகர் சிலைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட 177 பேர் மீது வழக்குப்பதிவு

author img

By

Published : Sep 1, 2021, 8:25 PM IST

சென்னை: விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக பொது இடங்களில், சிலைகளை நிறுவுவது, பொது இடங்களில் விழாவைக் கொண்டாடுவது ஆகியவற்றிற்கு தமிழ்நாடு அரசு அனுமதி மறுத்தது.

தமிழ்நாடு அரசின் அறிவிப்பை எதிர்த்து நேற்று (ஆக. 31) சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்துவரும் கலைவாணர் அரங்கத்தின் பிரதான வாயில் முன்பு, வாலாஜா சாலையில், தமிழ்நாடு கைவினை காகிதக்கூழ் விநாயகர் சிலைகள், களிமண் பொம்மைகள் தயாரிப்பாளர்கள் நல சங்கத்தினர் சிலர், விநாயகர் சிலைகளுடன் சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

5 பிரிவுகளில் வழக்குப்பதிவு

இதையடுத்து, காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களைக் கைதுசெய்து, பின்னர் விடுவித்தனர். இந்நிலையில், மறியலில் ஈடுபட்ட சங்கத்தினர் 177 பேர் மீது திருவல்லிக்கேணி காவலர்கள் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்திய தண்டனை சட்டப் பிரிவுகளான 143- சட்டவிரோதமாக கூடுதல், 341- வெளியே செல்லாமல் தடுத்து நிறுத்துதல், 269- உயிருக்கு ஆபத்தான தொற்றுநோயைப் பரப்பக்கூடிய செயலில் ஈடுபடுதல், தொற்றுநோய் பரவல் தடுப்புச் சட்டம், சென்னை காவல் சட்டம் ஆகிய ஐந்து பிரிவுகளின்கீழ் திருவல்லிக்கேணி காவலர்கள் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையும் படிங்க: 'கோடநாடு வழக்கு... எடப்பாடி பயப்பட அவசியமில்லை - டிடிவி தினகரன்'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.