தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பினர் பள்ளிக் கல்வித்துறை அலுவலர்களிடம் தங்களின் கோரிக்கை மனுக்களை அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், ”தனியார் பள்ளியில் படித்த மாணவர்கள் பலர், அரசுப் பள்ளியில் சேர்ந்து வருகின்றனர். அவர்கள் தனியார் பள்ளியில் தங்களின் பழைய கட்டண நிலுவையை கட்டாமலும், மாற்றுச் சான்றிதழ் பெறாமலும் அரசுப் பள்ளியில் சேர்கின்றனர். இதனால் தனியார் பள்ளிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது.
எனவே, தனியார் பள்ளிகளிலிருந்து நிலுவைத்தொகை எதுவும் இல்லை என்ற சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றை பெற்று வந்தால் மட்டுமே, அரசுப் பள்ளியில் மாணவர்களை சேர்க்க வேண்டுமென கல்வித்துறை உத்தரவிட வேண்டும். மேலும், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள், பெற்றோரிடம் ஆசைவார்த்தை கூறி அழைத்துச் சென்று சேர்க்கின்றனர்.
கரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பள்ளிகள் டிசம்பர் மாதம் வரை திறக்கப்படாத சூழல் ஏற்படலாம் எனத் தெரிகிறது. அவ்வாறு ஒரு நிலை வந்தால், 2020-21ஆம் கல்வி ஆண்டை பூஜ்யம் கல்வி ஆண்டாக அறிவிக்க வேண்டும். கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தில் தங்களுக்கு அளிக்க வேண்டிய நிலுவைக் கட்டணத்தை அரசு வழங்க வேண்டும் “ எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பேரிடர் மேலாண்மை சட்டப்படியே அரியர் தேர்வு ரத்து - தமிழ்நாடு அரசு