தமிழ்நாட்டில் 500க்கும் மேற்பட்ட தனியார் பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டுவருகின்றன. அந்த வகையில், தற்போது நிர்வாக ஒதுக்கீட்டு இடத்திற்கு ரூ.85 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், இக்கட்டணத்தை உயர்த்த வேண்டும் என, தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்தநிலையில், தற்போது அந்த கட்டணம் ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படுவதாக ஓய்வுபெற்ற நீதியரசர் வெங்கட்ராமன் தலைமையிலான கட்டண நிர்ணயக்குழு, கட்டண நிர்ணயம் செய்து கல்லூரிகளுக்கு வழங்கியுள்ளது. கரோனா பொறியியல் மாணவர்களுக்கான கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது பெற்றோர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க...29 ஆண்டுகால கேரள கன்னியாஸ்திரி மரண வழக்கு ஓர் பார்வை...