ETV Bharat / city

சென்னை தனியார் கல்லூரி மாணவர்களுக்குள் தகராறு - காவல்துறை எச்சரிக்கை

அண்ணாநகரில் உள்ள தனியார் கல்லூரி வகுப்பறையில் மாணவர்கள் ஒருவரையொருவர் தாக்கி கொண்டதையடுத்து அந்த மாணவர்களை காவல்துறை எச்சரித்து அனுப்பியது.

சென்னை காவல்துறை
சென்னை காவல்துறை
author img

By

Published : Dec 12, 2021, 7:35 AM IST

சென்னை: பூந்தமல்லி பகுதியைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஆகாஷ். இருவரும் அண்ணாநகரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று டிச.10 ஆம் தேதி வகுப்பறையில் ஏற்பட்ட ஒரு பிரச்சினை காரணமாக ஏற்பட்ட மோதலில் மாணவரான தட்சிணாமூர்த்தி, ஆகாஷின் உதடு மற்றும் முகத்தில் காயம் ஏற்படுத்தினார்.

உடனே தகவலறிந்த அண்ணாநகர் காவல்துறை, விசாரணை மேற்கொண்டதில் தட்சிணாமூர்த்தி, தன்னைக் கத்தியால் தாக்கியதாக ஆகாஷ் தெரிவித்துள்ளார். மேலும், வகுப்பறையில் கொடுக்கல் வாங்கல் மற்றும் கிண்டல் செய்ததால் ஏற்பட்ட பிரச்சனையால் தாக்கி கொண்டதாகவும் தெரியவந்தது.

ஆனால், கத்தியால் தாக்கிய காயம் இல்லை எனவும் நகக்கீறலினால் ஏற்பட்ட காயம் என தெரியவந்தது. இதனையடுத்து இரண்டு தரப்பு பெற்றோர்களையும் அழைத்து மாணவர்களை எச்சரித்த காவல்துறை, இருவரிடமும் அடுத்த முறை எந்த பிரச்சனையிலும் ஈடுபட மாட்டோம் என்று எழுதிக் கொடுத்ததன் பின் அனுப்பி வைக்கப்பட்டனர்.

காவல் ஆணையர் எச்சரிக்கை

முன்னதாக, மாணவர்கள் இது போன்ற தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டால் நிச்சயம் வழக்கு பதிவு செய்யவும், கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் காவல் ஆணையர் சார்பில் அறிக்கைகள் வெளியிட்டுள்ள நிலையில் மீண்டும் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட கூடாது என மாணவர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஏற்கனவே 'ரூட்டு தல' என்ற பெயரில் சென்னையில் இருக்கக்கூடிய பிரபல கல்லூரிகளான பச்சையப்பன் கல்லூரி, மாநிலக் கல்லூரி, புதுக் கல்லூரி, நந்தனம் கல்லூரி மாணவர்கள், மோதிக் கொள்ளக் கூடிய சம்பவங்கள் அரங்கேறி வரும்நிலையில் தற்போது அண்ணாநகரில் வகுப்பறைக்குள் தாக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: புதுவை மாநில தலைமைச் செயலாளருக்கு பிடிவாரண்ட்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.