ETV Bharat / city

சென்னையில் தீப்பிடித்து எரிந்த தனியார் ஆம்புலன்ஸ் - சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் நோயாளியுடன் சென்ற தனியார் ஆம்புலன்ஸ் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தீப்பிடித்து எரிந்த தனியார் ஆம்புலன்ஸ்
தீப்பிடித்து எரிந்த தனியார் ஆம்புலன்ஸ்
author img

By

Published : Apr 6, 2022, 9:17 AM IST

சென்னை: கீழ்ப்பாக்கம் லாக் தெருவைச் சேர்ந்தவர் நடராஜன் (78). இவர் முடக்க நோய் சிகிச்சைக்காக ஆந்திர பிரதேசம் மாநிலம் சித்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு செல்ல வேண்டி இருந்தது. அங்கு செல்வதற்காக தனியார் ஆம்புலன்ஸ் வாகனத்தை பதிவு செய்து நேற்றிரவு (ஏப்ரல். 5) அவர் வரவழைத்தார்.

நடராஜனுடன் அவரது மனைவி, மருமகன் சதீஷ் ஆகியோர் சென்றனர். கீழ்ப்பாக்கம் நியூ ஆவடி சாலையில் ஆம்புலன்ஸ் முன்பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது.

இதனால் அதிர்ச்சியடைந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ராபின் நடராஜன், அனைவரையும் கீழே இறங்க வைத்தார். பின்னர் தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தார். உடனே வில்லிவாக்கம், கீழ்ப்பாக்கம் தீயணைப்பு நிலையங்களில் இருந்து விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் வேன் முழுவதும் எரிந்து சாம்பலானது.

இதில் யாருக்கும் காயமில்லை. தகவல் அறிந்து கீழ்ப்பாக்கம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று நடராஜன் உள்ளிட்டோரை ஆட்டோ மூலம் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். மேலும் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: 'என் காதலனுடன் பேசக்கூடாது' - சாலையில் சண்டை போட்ட கல்லூரி மாணவிகள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.