ETV Bharat / city

பிரதமர் மோடி சென்னை வருகை; போக்குவரத்து நெரிசலுக்கு வாய்ப்புள்ள இடங்கள்? - பிரதமர் மோடி சென்னை வருகை

பிரதமர் மோடி சென்னை வருவதையொட்டி எங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட உள்ளது? என்பது தொடர்பாக சென்னை போக்குவரத்து காவல்துறை வாகன ஓட்டிகளுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசலுக்கு வாய்ப்புள்ள இடங்கள்

author img

By

Published : May 26, 2022, 8:18 AM IST

சென்னை: பிரதமர் மோடி பல்வேறு திட்டங்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்க மற்றும் ஆறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட இன்று (மே. 26) சென்னைக்கு வருகை தர உள்ளார். இதற்கான விழா சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது.

பிரதமரின் வருகையையொட்டி ஈ.வே.ரா சாலை, புரசைவாக்கம் தாசபிரகாஷ் முதல் சென்னை மருத்துவக் கல்லூரி சந்திப்பு வரை மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும் பொதுவாக அண்ணாசாலை, எஸ்வி பட்டேல் சாலை மற்றும் ஜிஎஸ்டி சாலைகளில் போக்குவரத்து மெதுவாக இருக்கும். ஆகையால் வாகன ஓட்டிகள் தங்களது பயணத்தை இந்த சாலைளை தவிர்த்து மாற்று வழியில் செல்ல திட்டமிடுமாறு சென்னை போக்குவரத்து காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது. வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு நல்குமாறும் போக்குவரத்து காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

இதையும் படிங்க: குற்றச்செயல்களை தடுப்பதில் காவல்துறை தோல்வி' - அண்ணாமலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.