சென்னை: குன்றத்தூர் நந்தம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் குமரன். இவர் அப்பகுதியில் உள்ள அம்மன் கோயிலில் சாமியாராக உள்ளார். இவர் 15 வயது சிறுமியை கடந்த 2015ஆம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனை மறைக்க குமரனின் தாய், தந்தை, அண்ணன் ஆகிய குடும்பத்தார் 15 வயது சிறுமியை கட்டாய திருமணம் செய்துள்ளனர். பின்னர் இருவரும் தனியாக வசித்து வந்தனர். ஆனால் குமரன் தொடர்ந்து சிறுமியை பாலியல் தொந்தரவு செய்து, வீட்டை விட்டு துரத்தியதாக கூறப்படுகிறது.
பின்னர் குமரன் வேறொரு திருமணம் செய்து கொண்டார். அக்காவின் வாழ்க்கையை எண்ணி கடந்த 5 ஆண்டுகளாக அமைதி காத்த சிறுமி, 5 ஆண்டுகளுக்குப் பிறகு ஆதாரத்துடன் பூவிருந்தவல்லி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனை தொடர்ந்து பூவிருந்தவல்லி மகளிர் காவல் துறையினர் குமரன், குமரனின் தாய் லோகம்மாள், தந்தை ராமநாதன், அண்ணன் வீரமுத்து,குமரனின் மனைவி புவனா உள்ளிட்ட 7 பேர் மீது போக்சோ சட்டம், குழந்தைத் திருமணம் உள்ளிட்ட ஒன்பது பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து குமரனை போலீசார் கைது செய்தனர்.
மேலும் குமரனுக்கு உடந்தையாக செயல்பட்டு தற்போது தலைமறைவாக உள்ள அவரது குடும்பத்தாரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:வேறொரு பெண்ணுடன் உறவு; கணவனைத் தீர்த்துக்கட்டிய மனைவி - ஐவர் கைது