ஆண்டு தோறும் காவல்துறையில் சிறப்புற பணியாற்றும் அதிகாரிகளுக்கு குடியரசு தினத்தன்று குடியரசுத் தலைவர் விருது வழங்கி மத்திய அரசு கவுரவிக்கிறது. அந்த வகையில் இந்த ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் 20 பேர், மெச்சத்தகுந்த மற்றும் சிறந்த பணிக்கான குடியரசுத் தலைவர் விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தகைசார் பணிக்கான குடியரசுத் தலைவர் விருது, சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால், தமிழக போலீஸ் அகாடமி இயக்குநரும், கூடுதல் டிஜிபியுமான டேவிட்சன் தேவாசிர்வாதம், தமிழக சிறப்பு காவல்படை 4 ஆவது பட்டாலியன் காவல் ஆய்வாளர் மணிகண்டகுமார் ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேப்போல், மெச்சத்தகுந்த பணிக்கான குடியரசுத் தலைவர் விருது, சிலைகடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி அன்பு, சிறப்பு புலனாய்வு பிரிவு ஐஜி கபில் குமார் சரத்கர், தமிழக காவல்துறை நிர்வாகப்பிரிவு ஐஜி சந்தோஷ் குமார் உள்பட மொத்தம் 17 காவல்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: அமைச்சர் வளர்மதியின் கார் மீது லாரி மோதல்: தற்செயலா, சதியா?