ETV Bharat / city

இது இந்துக்கள் நாடு: திமுக எம்.பி. ஆ.ராசா கருத்து ஏற்புடையது அல்ல! - பிரேமலதா விஜயகாந்த் - Executive Committee of DMDK is General Committee

’இது இந்துக்கள் நாடு. இந்து மதம் தொடர்பாக அண்மையில் திமுக எம்.பி. ஆ.ராசா பேசிய கருத்து ஏற்புடையது அல்ல’ என தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Sep 14, 2022, 10:51 PM IST

சென்னை: தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் தொடங்கப்பட்டு 17 ஆண்டுகள் ஆனதைத் தொடர்ந்து, தேமுதிக தலைமை அலுவலகத்தில் இன்று (செப்.14) அக்கட்சியின் 18ஆம் ஆண்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், 'இது இந்துக்கள் நாடு. இந்து மதம் தொடர்பாக அண்மையில் திமுக எம்.பி. ஆ.ராசா பேசிய கருத்து ஏற்புடையது அல்ல. தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை காரணமாக கட்சியில் சிறிது தொய்வு உள்ளபோதும் கட்சி உருவாக்கப்பட்ட நோக்கத்திற்காக தொடர்ந்து செயல்படும்' எனவும் தெரிவித்துள்ளர்.

லட்சியத்தை நோக்கி பயணிக்கும் தேமுதிக: முன்னதாக, தேமுதிக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தேமுதிகவின் கட்சி கொடியினை ஏற்றி 500 நபர்களுக்கு இலவச தண்ணீர் குடம் மற்றும் புடவை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் உடல் நலன் காரணமாக தேமுதிகவில் தொய்வு இருக்கலாம். ஆனால், தொடங்கப்பட்ட லட்சியத்தை நோக்கி தொடர்ந்து பயணித்து வருகிறது,தேமுதிக.

தேமுதிக முப்பெரும் விழா: இன்று தமிழ்நாடு முழுவதும் கட்சியின் தொண்டர்களால் தேமுதிகவின் 18ஆம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி கொண்டாடப்பட்டு வருவதன் ஒருபகுதியாக தலைமை அலுவலகத்தில் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் நலத்திட்ட உதவிகள் கொடுத்து கட்சியின் தொடக்க நாளை தொண்டர்கள் கொண்டாடி வருகிறார்கள். விழுப்புரத்தில் இன்று முப்பெரும் விழா நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து வரும் 18ஆம் தேதி தாம்பரத்தில் கொண்டாடப்பட உள்ளது.

தேர்தலுக்குத் தாயாரகும் பணி: தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை காரணமாக கட்சியில் சிறிது தொய்வு உள்ளது. ஆனால், எந்த கட்சி நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதோ, அதோடு தொடர்ந்து பயணித்து வருகிறது. நடைபெற்று வரும் தேமுதிகவின் உட்கட்சித்தேர்தல் முடிந்ததும் செயற்குழு, பொதுக்குழு நடத்தப்படும். வருகின்ற 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத்தேர்தலுக்காக தேமுதிக தயாராகி வருகிறது.

இந்துக்கள் நாடு: யாருடன் கூட்டணி என்பது குறித்து முடிவெடுக்க தற்பொழுது சரியான நேரமில்லை. இன்னும் தேர்தலுக்கு இரண்டு ஆண்டுகள் உள்ளதால், தற்போது கட்சியின் வளர்ச்சி குறித்துப் பணிகள் நடைபெற்று வருகிறது. உரிய நேரத்தில் உரிய முடிவு எடுக்கப்படும். அதேபோல், தேமுதிக யாருடன் கூட்டணியில் இருக்கிறது என்பதனை தேமுதிக தான் அறிவிக்கும். கூட்டணி கட்சிகள் அல்ல’ என்றார்.

இந்து மதம் தொடர்பாக, அண்மையில் திமுக எம்.பி. ஆ.ராசா கூறிய கருத்திற்குப் பதில் அளித்த பிரேமலதா, ’இது இந்துக்கள் நாடு தான். இந்து மதம் தொடர்பாக அண்மையில் திமுக எம்.பி. ஆ.ராசா பேசிய கருத்து ஏற்புடையது அல்ல. தேமுதிக எந்த ஒரு சாதி, மதப்பாகுபாடுகளும் இன்றி மக்களின் நன்மைக்காக உருவாக்கப்பட்ட கட்சி’ என்றார்.

இதையும் படிங்க: இந்துவாக இருக்கும் வரை சூத்திரன் தான்.. ஆ.ராசா பேச்சுக்கு அண்ணாமலை கண்டனம்..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.