ETV Bharat / city

விஜயகாந்த் உடல்நிலை நன்றாக உள்ளது... பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிகவின் நிறுவனத்தலைவரான விஜயகாந்தின் உடல்நிலை நன்றாக உள்ளதாக தேமுதிக பொருளாளரும் அவரது மனைவியுமான பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 24, 2022, 4:49 PM IST

சென்னை: வரும் ஆக.25ஆம் தேதி (நாளை) தேமுதிக தலைவர் விஜயகாந்த் 70ஆவது பிறந்த நாளைக் கொண்டாட உள்ளதையொட்டி, தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடந்த ரத்த தான முகாமில் கலந்துகொண்ட அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், 'உங்கள் தலைவர் கேப்டன் விஜயகாந்தின் உடல்நிலை நன்றாக உள்ளது' என்று தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 70ஆவது பிறந்தநாள் நாளை (ஆக.25) கொண்டாடப்பட உள்ளநிலையில், கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வழங்கினார்.

நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணி
நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணி

மேலும், 70 ஆட்டோ ஓட்டுநர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான காப்பீட்டுத் திட்டம், 'எம்.ஜி.ஆர் காது கேளாதோர் பள்ளி மாணவர்களுக்கு ரூ.50 ஆயிரம் உதவித்தொகை, தேமுதிகவின் மூத்த நிர்வாகிகள் 70 பேருக்கு தலா ரூ.10,000 மதிப்பிலான காசோலைகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணி
நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணி

இது தவிர, இலவச கண் பரிசோதனை முகாமும் 70 பேர் ரத்த தானமும் வழங்கினர். தொடர்ந்து மேடையில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், "கேப்டன் ரத்தமும் 'O Positive' தான். இங்கு இரத்த தானம் வழங்க வந்திருப்பவர்கள் ரத்தமும் 'O Positive' தான். இதுதான் தலைவனுக்கும் தொண்டனுக்குமான பந்தம். இன்னொருவர் B positive என்றார். என் இரத்தமும் 'B Positive' தான். இது ஜென்ம பந்தம்; இரத்த பந்தம் என்றால் இது தான்.

ஆரம்ப காலத்தில் இருந்து இன்றைக்கு வரைக்கும் கேப்டன் பிறந்தநாள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் வறுமை ஒழிப்பு தினமாகவே கொண்டாடப்படும். விஜயகாந்த் உடல் நிலை நன்றாக உள்ளது. எனவே, யாரும் அவருடைய உடல்நிலைப் பற்றி தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம்.

விஜயகாந்தின் 70ஆவது பிறந்தநாளையொட்டி, ரத்த தான முகாம்

தமிழ்நாட்டில் இன்று நடக்கும் அனைத்து மக்கள் பிரச்னைகள், எதுவாக இருந்தாலும் உடனடியாகத் தீர்க்க வேண்டும் என்பதில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் உறுதியாக இருக்கிறது. நாளை விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு தலைமை அலுவலகத்திற்கு விஜயகாந்த் வர உள்ளார். தொண்டர்கள் அவரைச் சந்திக்க வரலாம்’ எனக் கூறினார்.

இதையும் படிங்க: தேர்தல் அவதூறு வழக்கில் பிரேமலதா விஜயகாந்த் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.