ETV Bharat / city

'மாணவ, மாணவிகளுக்கு சிப்பாய்களாக இருப்போம்' அன்பில் மகேஷ் பொய்யாமொழி - மாணவ மாணவிகளுக்கு சிப்பாய்களாக இருந்து வழி நடத்துகிறோம்

மாணவ, மாணவிகளே நாட்டை ஆள போகிற ராஜா ராணிகள், அவர்களுக்கு சிப்பாய்களாக இருப்போம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

அன்பில் மகேஷ் பொய்யாமொழி உரை
அன்பில் மகேஷ் பொய்யாமொழி உரை
author img

By

Published : May 4, 2022, 12:04 PM IST

சென்னை: வேளச்சேரியில் உள்ள நட்சத்திர விடுதியில் 44ஆவது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க உள்ள, கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், நக்கீரன் கோபால் மற்றும் பிரக்ஞானந்தா குடும்பத்தினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது பிரக்ஞானந்தாவுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ராதாகிருஷ்ணன் மற்றும் நக்கீரன் கோபால் உள்ளிட்டோர் கலந்துரையாடினர்.

மேடையில் பிரக்ஞானந்தாவின் அம்மா நாகலட்சுமி பேசுகையில், "எங்கள் வீட்டின் அருகில் இருக்கும் செஸ் பயிற்சி பள்ளியில் பிரக்ஞானந்தாவை சேர்த்து விட்டிருந்தோம். அதனை தொடர்ந்து பிரக்ஞானந்தா ஆர்வம் வளத்துக்கொண்டான். அவன் எங்களை பெருமையடைய செய்த தருணம், கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை, இந்த சின்ன வயதிலேயே வாங்கியது" என்றார்.

பிரக்ஞானந்தாவின் அப்பா ரமேஷ், இந்த மேடையில் பிரக்ஞானந்தா எங்களை அமர வைத்திருப்பதே எங்களுக்கு பெருமை என்றார்.

அன்பில் மகேஷ் பொய்யாமொழி உரை

மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேசுகையில், "பிரக்ஞானந்தா இளம் வயதிலேயே கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெற்றுள்ளார். அது மிகப்பெரிய விஷயம். 22-2-22 ஆம் ஆண்டு உலகின் நம்பர் ஒன் செஸ் வீரர் கார்ல்சனை வீழ்த்தி, புதிய வரலாற்றையும் படைத்தார். மிக விரைவில் உலக சாம்பியன் ஆவர்" என நம்பிக்கை தெரிவித்தார். அதோடு அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் பேசுகையில், "37 நாடுகளுக்கு சென்றுள்ள பிரக்ஞானந்தா இன்றும் எளிமையாக உள்ளார். நம் தெருவில் இருப்பவரை பாராட்ட வந்ததை போல் தான் உணர்கிறேன். 11 வருடம் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ள இவர் தற்போது வரை கர்வம் இல்லாமல் இருக்கிறார். நமக்கு எதிரியே இந்த வாட்ஸ்ஆப், முகநூல்தான். இந்த முறை சென்னையில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இவர்தான் வெற்றி பெறுவார்" என்றார்.

கேள்வி பதில் நிகழ்வு

1. போட்டிக்கு ஒருநாள் முன் எப்படி உங்களை தாயார் படுத்தி கொள்வீர்கள்?

போட்டிக்கு ஒருநாள் முன் போட்டி குறித்த மனநிலையை தயார் நிலையில் வைத்துக்கொள்வேன்.

2. பல நாடுகளுக்கு சென்றுள்ள உங்களுக்கு எந்த உணவு மிகவும் பிடிக்கும்?

வெளிநாடுகளுக்கு சென்றாலும் இந்திய உணவுகளே எனது விருப்பம். அதற்கு அம்மா என் கூடவே பயணம் செய்து நம் வீட்டு உணவை சமைத்து கொடுப்பார்.

3. உங்களுக்கு ரோல்மாடல் யார்?

அக்காவை பார்த்து தான் நான் சிறுவயதில் விளையாட தொடங்கினேன். எனவே அவள்தான் எனது முதல் ரோல்மாடல். வளர்ந்த பிறகு விஷ்வநாதன் ஆனந்த் என்னுடைய ரோல்மாடல்.

4. முதல் வெற்றி கடைசி வெற்றி எப்படி பாக்குறீங்க?

இந்தியன் சாம்பியன் சிப் 2ஆவது இடம் பெற்றது முதல் வெற்றி. மகிழ்ச்சிதான்.

5. இளம் வீரர்களுக்கு உங்கள் அறிவுரை?

போட்டியின் வெற்றி தோல்வியை சிந்திக்க வேண்டாம். மகிழ்ச்சியாக உங்கள் விளையாட்டை விளையாடுங்கள். இதுவே இளம் வீரர்களுக்கு என்னுடைய அறிவுரை.

இதையடுத்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், "இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் இப்படி ஒரு மனிதன் இருக்கிறார் என்று உலகத்திற்கே எடுத்துக்காட்டாக உள்ளார். அதனாலேயே இந்த நிகழ்ச்சியை தவற விட கூடாது என்று திருச்சியில் இருந்து இந்த நிகழ்விற்கு சாலை வழியாக வந்துள்ளேன். விஸ்வநாதன் ஆனந்தை தோற்கடித்த கார்ல்சனை இவர் தோற்கடித்தார் என்பது எவ்வளவு பெரிய விஷயம். குழந்தைகளை கண்டிக்காமல் அவர்களின் கவனத்தை மாற்ற வேண்டும். இந்த சமூகம் சொல்லி கொடுப்பதை மாணவர்கள் பள்ளியில் வெளிப்படுத்துகிறார்கள். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆக வேண்டும் என நான் இங்கு வரவில்லை. மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆசையிலேயே இந்த பணிக்கு வந்துள்ளேன். உதயநிதி ஸ்டாலின் கூட நடக்கூடிய செஸ் ஒலிம்பியாட் போட்டி அனைவரையும் திரும்பி பார்க்கும் அளவில் இருக்க வேண்டும் எனக் கூறினார். அந்த அளவிற்கு தாயாராகி உள்ளோம். என்னை பொறுத்தவரை என்னுடைய மாணவர்களும், மாணவிகளும் தான் ராஜா, ராணிகள். ஏனெனில் எதிர்காலத்தில் அவர்கள் தான் நாட்டை அழப்போகிறவர்கள். அவர்களுக்கு சிப்பாய்களாக இருப்போம்" என்றார்.

கடைசியாக பிரக்ஞானந்தா பேசுகையில், "ஒலிம்பியாட் சென்னையில் நடப்பது எனக்கு பெருமையாக உள்ளது. உலக செஸ் போட்டி நடத்த 4 ஆண்டுகள் ஆகும். ஆனால் 4 மாதத்தில் சென்னையில் நடக்கிறது. எனக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும். இதனை ஏற்பாடு செய்த முதலமைச்சருக்கு நன்றி" என்றார்.

இதையும் படிங்க: திருச்சியில் முகாமிட்ட மும்மூர்த்திகள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.