ETV Bharat / city

தபால்துறை முகவர் எனக்கூறி லட்சக் கணக்கில் பண மோசடி: பெண் கைது!

சென்னை: தபால்துறை முகவர் எனக்கூறி அண்ணா நகரைச் சேர்ந்த மருத்துவ தம்பதிகளிடம் 35 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த பெண்ணை காவல் துறையினர் கைது செய்தனர்.

தபால்துறை முகவர் எனக்கூறி லட்சக் கணக்கில் பண மோசடி: பெண் கைது!
author img

By

Published : Aug 29, 2019, 9:31 PM IST

சென்னை அண்ணா நகர் பகுதியில் உள்ள யூ.ஆர் நகர் முதல் தெருவில் வசிப்பவர்கள் ராமகோபாலன் - விஜயலட்சுமி தம்பதியினர். இவர்கள் இருவரும் மருத்துவர்களாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். இவர்களுக்கு கடந்த 2006ஆம் ஆண்டு தெரிந்தவர்கள் மூலம் அண்ணா சாலை தபால் நிலையத்தில் முகவராக பணியாற்றும் பிரேமலதா என்ற பெண் அறிமுகமாகியுள்ளார்.

இதனையடுத்து பிரேமலதா மருத்துவ தம்பதியிடம், ஓய்வின் மூலம் கிடைக்கும் பணத்தை தபால் கணக்கில் போட்டு வைத்தால், வருங்காலத்தில் பயன் அளிப்பதோடு மாதா மாதம் வட்டியும் கிடைக்கும் என ஆசைக்காட்டியுள்ளார். இதை நம்பிய தம்பதியினர் பிரேமலதா மூலம் தபால் கணக்கு தொடங்க பணத்தை அளித்துள்ளனர். பிரேமலதாவும் பணத்தை பெற்றுக் கொண்டு அவர்களுக்கு தபால் கணக்கிற்கான பாஸ்புக் உள்ளிட்ட ஆவணங்களையும் கொடுத்துள்ளார்.

இதில் 2006ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டுவரை சரியாக தபால் கணக்கில் பணம் செலுத்தி மாதா மாதம் வட்டியையும் பிரேமலதா அளிக்கவே, ராமகோபாலன் - விஜயலட்சுமி தம்பதியினருக்கு அவர் மீது நம்பகத்தன்மை அதிகரித்துள்ளது.

இதனால் அவரிடம் தொடர்ந்து பணம் அளித்துவந்துள்ளனர். ஆனால் பிரேமலதா 2011க்கு பிறகு வாங்கிய பணத்தை தபால் கணக்கில் செலுத்தாமல் அவரே பாஸ்புக்கில் வரவு வைத்துக்கொண்டு பணத்தை தன் தேவைக்காக செலவு செய்துள்ளார்.

இந்நிலையில் வட்டிபோக முழு தொகை அளிக்கும் நாள் வந்தும் தங்கள் கைக்கு பணம் வராமல் காலதாமதம் ஆகவே ராமகோபாலன் பிரேமலதாவை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவரது அலைபேசி எண் அணைக்கப்பட்டிருக்கவே சந்தேகமடைந்த ராமகோபாலன் தபால் நிலையத்திற்கு சென்று விசாரித்தபோது, 2011 க்கு பிறகு தங்கள் கணக்கில் பணம் செலுத்தப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து ராமகோபாலன் தம்பதியினர், பிரேமலதா தங்களது ஓய்வு பணம் சுமார் 35 லட்சம் ரூபாயை ஏமாற்றிவிட்டதாகக் கூறி சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்றிரவு பிரேமலதா சோழவரம் பகுதியில் இருப்பதாக தெரியவர அங்கு சென்ற காவல் துறையினர் அவரை கைது செய்து விசாரித்தபோது, தான் ஏமாற்றியது உண்மைதான் என அவர் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து பிரேமலதாவை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

தபால்துறை முகவர் எனக்கூறி லட்சக் கணக்கில் பண மோசடி: பெண் கைது!

மேலும், பல்வேறு நபர்களிடம் பிரேமலதா இதே போன்று மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் என்பதன் அடிப்படையில் அவரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க காவல் துறையினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Intro:

Body:cheating

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.