ETV Bharat / city

மாற்று கட்சியிலிருந்து திமுகவில் இணைந்தவர்களுக்குப் பதவி

திமுகவின் புதிய நிர்வாகிகளாக மாற்று கட்சியிலிருந்து வந்து திமுகவில் இணைந்தவர்களுக்கு பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

new-representatives
new-representatives
author img

By

Published : Oct 3, 2020, 10:34 PM IST

சென்னை: திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "திமுக சட்டதிட்ட விதிகள் 18, 19, 31இன்படி நிர்வாகிகள் நியமிக்கப்படுள்ளனர்.

திமுக தேர்தல் பணிக்குழு இணைத் தலைவராக ராஜகண்ணப்பன் நியமிக்கப்பட்டுள்ளார். ஞானசேகரன், டாக்டர் விஜய், பரணி இ.ஏ. கார்த்திகேயன் ஆகியோர் தேர்தல் பணிக்குழு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். திமுக செய்தித் தொடர்பாளராக பி.டி. அரசகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏ.ஜி சம்பத் தீர்மான குழுச் செயலாளராகவும், முத்துசாமி தீர்மான குழு இணைச் செயலாளராகவும், நாச்சிமுத்து, எம். வீரகோபால் தீர்மான குழு உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சட்டவிதி 31, பிரிவு 6இன்படி திமுக விவசாயி அணி இணைச் செயலாளர்களாக எஸ்.கே. வேதரத்தினம், என். சிவகுமார் நியமிக்கப்பட்டுள்ளனர். அன்னியூர் சிவா விவசாய அணி துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல், திமுக சட்டவிதி 31 பிரிவு 14இன்படி திமுக மருத்துவ அணி துணைச் செயலாளராக எ.வ.வே. கம்பன், இணைச் செயலாளராக இரா. லட்சுமணன் நியமிக்கப்பட்டுள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார்.

திமுக மீனவர் செயலாளராக ஆர்.பத்மநாபனும், துணை செயலாளராக துறைமுகம் சி.புனோரன்ஸூம், சிறுபான்மை நலஉரிமைப் பிரிவு துணைச் செயலாளராக அடையாறு ஷபீஸூம் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு திமுக தலைமை தெரிவித்துள்ளது.

திமுக புதிய நிர்வாகிகளில், ராஜகண்ணப்பன் அதிமுகவிலிருந்தும், பி.டி.அரசகுமார் பாஜகவிலிருந்தும், பரணி கார்த்திகேயன் அமமுகவிலிருந்தும் வந்து அண்மையில் திமுக-வில் இணைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : சாலையின் ஓரத்தில் கிடந்த கற்சிற்பங்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.