ETV Bharat / city

அம்மா உணவகத்தில் மீண்டும் கட்டணம் வசூல்! - ஏழை எளியோர் அதிர்ச்சி! - அம்மா உணவகம்

சென்னை: ஊரடங்கு காலம் முடியும் வரை இலவசமாக உணவு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அம்மா உணவகங்களில் திடீரென மீண்டும் கட்டணம் வசூலிக்கப்படுவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

unavagam
unavagam
author img

By

Published : May 4, 2020, 3:53 PM IST

சென்னை மாநகராட்சியில் உள்ள 407 அம்மா உணவகங்கள், நகராட்சிகளில் உள்ள 247 அம்மா உணவகங்கள், ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் செயல்படும் 4 அம்மா உணவகங்கள் என மொத்தம் 658 அம்மா உணவகங்களில் இலவசமாக அரசு உணவளித்து வந்தது. இவை மூலம் கட்டடத் தொழிலாளர்கள், தினக் கூலிக்கு வேலை செய்பவர்கள் என பல்வேறு தரப்பினரரும், ஊரடங்கு நேரத்தில் இலவசமாக உணவை உண்டு வந்தனர்.

இந்நிலையில் இன்று முதல் மூன்றாவது முறை ஊரடங்கு நாடு முழுவதும் தொடங்கியுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் நிபந்தனைகளுடன் சிறிய அளவு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. அதேநேரத்தில் இவ்வளவு நாட்களாக இலவசமாக உணவளித்து வந்த அம்மா உணவகங்களில் மீண்டும் கட்டணம் வசூலிக்கத் தொடங்கியுள்ளனர். இது ஏழை எளிய மக்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை உணவு உண்ண வந்த மக்கள் கட்டண வசூலிப்பு என்றதும், மனமுடைந்து போனார்கள். ஊரடங்கு காலம் முடியும் வரை இலவசமாக உணவு வழங்க அரசு முன்வர வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

இதையும் படிங்க: தளர்வுகள் அறிவித்தும் அரசு கட்டுமானத் தொழில் தொடங்கவில்லை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.