ETV Bharat / city

புதுச்சேரி மின் கட்டணக் குளறுபடியை கண்டித்து முற்றுகை போராட்டம்! - சுசி கம்யூனிஸ்ட்

புதுச்சேரி: மின் துறையின் கட்டண குளறுபடியைக் கண்டித்து முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

Suci Communist Protest In Pudhucherry
Suci Communist Protest In Pudhucherry
author img

By

Published : Sep 25, 2020, 9:42 PM IST

கரோனா ஊரடங்கு காலத்தில் மக்கள் பயன்படுத்திய மின்சாரத்திற்கான கட்டணம் பன்மடங்கு உயர்த்தி அதற்கான ரசீது தற்போது புதுச்சேரி மின் நுகர்வோரிடம் வழங்கப்பட்டுள்ளது.

வாழ்வாதாரத்தை இழந்துள்ள மக்களுக்கு மின் கட்டண உயர்வு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

எனவே மின் கட்டணத்தை போர்கால அடிப்படையில் சரி செய்ய வேண்டும். மின்கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி உப்பளம் தலைமை மின்துறை அலுவலகம் முன்பு நடைபெற்ற முற்றுகை போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர குழு செயலாளர் மதிவாணன் தலைமை தாங்கினார்.

இந்தப் போராட்டத்தில், பிரதேச குழு மூத்த உறுப்பினர் தா.முருகன், பிரதேச செயலாளர் ராஜாங்கம், பிரதேச குழு உறுப்பினர்கள் ஆனந்த், கலியமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.