இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெரும்பிடுகு முத்தரையரின் 1344ஆவது சதயவிழா நாளை (23/05/2019) கொண்டாடப்பட உள்ளது. குறுநில மன்னருள் தலைசிறந்து விளங்கிய பெரும்பிடுகு முத்தரையர் ஆட்சி காலங்களில் தமிழை வளர்ப்பதிலும், சமதர்மத்தை பேணுவதிலும் முக்கிய பங்காற்றி இருந்தது அவர்களது வரலாற்றை படிக்கும்போது அறிய முடிகிறது.
நான் ஒவ்வொரு வருடமும் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழாவில் நேரடியாக கலந்துகொண்டு அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து அவருக்கு மரியாதை செலுத்துவது வழக்கம். ஆனால் இம்முறை 23/05/2019 அன்று மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற இருப்பதால் தவிர்க்க முடியாத சூழலால் நேரில் சென்று மரியாதை செலுத்த முடியாத நிலையில், அவரது வீரத்தையும், ஆளுமையையும் போற்றி நினைவு கூர்ந்து அவருக்கு வீர வணக்கத்தை மனதார செலுத்துவதை எனது கடமையாக கருதுகிறேன். அவரை குறிப்பிட்ட சமுதாயத்தின் மன்னராக கருதாமல் தமிழரின் அடையாளமாக போற்ற வேண்டும் என கூறியுள்ளார்.