தமிழ்நாட்டில் மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகள் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல்முறையாக வாக்களிப்பவர்கள் தொடங்கி முதியவர்கள்வரை ஆர்வமாக வாக்களிப்பதால் ஜனநாயகத் திருவிழா தமிழ்நாட்டில் களைகட்டியுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ செய்தியாளர்களிடம் பேசுகையில், ”மதியம் ஒரு மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 39.49 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக நாமக்கல்லில் 41.56 விழுக்காடும், குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 36.09% வாக்குகளும் பதிவாகியுள்ளன. இதுவரை 384 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளன என்றார். அதேபோல் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் இதுவரை 42.92 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன என்றார்.