ETV Bharat / city

கார் கண்ணாடியை உடைக்கும் நிர்வாண ஆசாமி - சிசிடிவி மூலம் போலீஸ் விசாரணை - கார் கண்ணாடிகள் உடைப்பு

சென்னையில் இரவு நேரத்தில் நிர்வாணமாக தெருக்களில் வலம் வந்து கார் கண்ணாடிகளை உடைத்துச் செல்லும் நபரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சிசிடிவியில் பதிவான காட்சிகள்
சிசிடிவியில் பதிவான காட்சிகள்
author img

By

Published : Aug 19, 2021, 4:20 PM IST

சென்னை: ஆழ்வார்பேட்டை டிடிகே சாலை, ஜெஜெ தெரு, அம்புஜம்மாள் தெரு அதன் சுற்று வட்டார தெருக்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள காரின் கண்ணாடிகளை அடையாளம் தெரியாத நபர்கள் இரவு நேரங்களில் உடைத்து செல்வதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார்கள் குவிந்தன.

குறிப்பாக அதே பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகரான சுமதியின் இரு கார்களை அடையாளம் தெரியாத நபர்கள் அடித்து நொறுக்கியதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்தனர்.

சிசிடிவி மூலம் சிக்கிய ஆசாமி

அதில், இரவு நேரத்தில் நிர்வாணமாக வரக்கூடிய நபர் ஒருவர் கையில் கற்களுடன் தெருக்களில் நிறுத்தி வைத்திருந்த விலையுயர்ந்த காரின் கண்ணாடியை அடித்து உடைத்துச் செல்வது பதிவாகியிருந்தது.

சிசிடிவியில் பதிவான காட்சிகள்

இந்த நிர்வாண நபர் அதே பகுதியில் சுமார் 30க்கும் மேற்பட்ட கார்களை அடித்து உடைத்துச் சென்றது தெரியவந்தது. இந்த சிசிடிவி காட்சிகளை வைத்து காவல் துறையினர், அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: காவல் துறையினர் கண் முன்னே வழக்கறிஞர்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.