ETV Bharat / city

இருசக்கர வாகனம் திருட்டு - சிசிடிவி காட்சி மூலம் விசாரணை - Police investigate

தாம்பரத்தில் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற அடையாளம் தெரியாத நபரை கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சிசிடிவி காட்சி மூலம் விசாரணை
சிசிடிவி காட்சி மூலம் விசாரணை
author img

By

Published : Oct 26, 2021, 7:51 PM IST

சென்னை: தாம்பரம் ரங்கநாதபுரம் இரண்டாவது தெருவில் வசித்து வருபவர் கிஷோர் (32). இவர் தாம்பரத்திலுள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இவர், வழக்கம்போல் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தனது ஆக்டிவா இருசக்கர வாகனத்தை வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு தூங்கச் சென்றுள்ளார்.

காலையில் எழுந்துவந்து பார்த்தபோது வெளியில் இருந்த இருசக்கர வாகனம் மாயமானதைக் கண்டு அதிர்சியடைந்தார். உடனே அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவை கிஷோர் ஆய்வு செய்தார்.

சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணை

அதில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நோட்டமிட்டபடி வந்து இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. உடனடியாக அவர் கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், வாகன திருடனைத் தேடி வருகின்றனர்.

சிசிடிவி காட்சி

மேலும், இப்பகுதியில் தொடர்சியாக இருசக்கர வாகனங்கள் திருடுபோவதால் விரைவில் இது குறித்து நடவடிக்கை எடுத்து அத்துனை குற்றவாளிகள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: இளம் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு: அரசு மருத்துவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.