ETV Bharat / city

அரும்பாக்கம் நகைக்கொள்ளையில் தீவிரமடையும் போலீஸாரின் விசாரணை - ஃபெட் நகைக்கடன் நிறுவனத்தில் நடந்த கொள்ளை

சென்னை அரும்பாக்கம் வங்கி கிளையில் நகைகள் கொள்ளைபோன சம்பவம் குறித்து முக்கிய குற்றவாளியான முருகனின் குடும்பத்தினரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 14, 2022, 1:41 PM IST

Updated : Aug 14, 2022, 2:00 PM IST

சென்னை: அரும்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் ஃபெட் நகைக்கடன் நிறுவனத்தின் கிளையில், நேற்று (ஆக. 13) இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த 3 பேர், காவலாளி மற்றும் ஊழியர்களை கட்டிப்போட்டு 20 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச்சென்றனர்.

அரும்பாக்கத்தில் இயங்கி வரும் ஃபெட் நகைக்கடன் நிறுவனத்தில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக கொரட்டூர் பிரதான சாலை TNHP குடியிருப்பைச்சேர்ந்த முக்கிய குற்றவாளி என கருதப்படும் முருகனை(36) பிடிக்க, அவரது சகோதரி கோகிலாவைப் பிடித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீசார் முகப்பேரில் தங்கியிருந்த மகேஷ் என்பவரையும் முருகனின் நண்பரான சரத்தின் தாயாரையும் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

அரும்பாக்கம் காவல்நிலையத்திற்குட்பட்ட ரச கார்டன் சாலையின் எஸ்பிஐ காலனியில் உள்ள ஃபெடரல் வங்கியின் கிளை நிறுவனமான ஃபெட் நகைக்கடன் நிறுவனத்தில் காவலாளி சரவணன் என்பவருக்கு முருகன் மற்றும் அவரது கூட்டாளி டேவிட்சன்(46) ஆகியோர் குடிப்பதற்கு மயக்கமருந்து கலந்த மாஸா கூல்டிரிங்க்ஸ் வாங்கித் தந்துள்ளனர். பின்னர், வங்கிக்குள் மேலாளர் சுரேஷ் (30), வாடிக்கையாளர் சேவை நிர்வாகி விஜயலட்சுமி (36) ஆகியோர் இருந்தபோது அத்துமீறி உள்ளே நுழைந்து, அவர்கள் இருவரையும் கத்தி முனையில் கழிவறைக்குள் அடைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, முருகனும் அவரது கூட்டாளி டேவிட்சன் என்பவரும் சேர்ந்து வங்கியின் லாக்கரை திறந்து அதிலிருந்த சுமார் ரூ.20 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளை அடித்துச்சென்றனர். அத்துடன் அடைத்து வைத்திருந்த வங்கி அலுவலர்கள் இருவரையும் மீண்டும் வெளியே அழைத்து வந்து, நகைகள் இருந்த லாக்கர் அறைக்குள் வைத்து மீண்டும் பூட்டியதாகக் கூறப்படுகிறது. தொடர்ச்சியாக, வங்கி நகைகளைக் கொள்ளையடித்து விட்டு வெளியே வந்த முருகனும் டேவிட்சனும் தங்களின் இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றதாகத் தெரிய வருகிறது.

முன்னதாக, அப்பகுதியிலிருந்த சிசிடிவி கேமராக்களை நகைக் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் அடித்து உடைத்ததாகத் தெரிகிறது. இதனால், அப்பகுதியில் உள்ள வேறு சிசிடிவி காட்சிகளில் ஏதேனும் பதிவாகியிருந்தனவா? என்று போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். பட்டப் பகலில் சென்னையில் வங்கி ஒன்றில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே இக்கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையவர்களை போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும், கொள்ளைச் சம்பவம் நடந்த வங்கியில் கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்கள் கைரேகைகளை சேகரித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த அரும்பாக்கம் கொள்ளைச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் குறித்து தகவல் அளிக்கும் காவலர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் சன்மானம் வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்த நிலையில், தற்போது பொதுமக்களுக்கும் ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தகவல் அளிக்கும் பொதுமக்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அரும்பாக்கம் கொள்ளை சம்பவம்... ஸ்கெட்ச் போட்டுக்கொடுத்த வங்கி ஊழியரின் நண்பர் கைது

Last Updated : Aug 14, 2022, 2:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.