ETV Bharat / city

ஊரடங்குப் பணிகளை தீவிரப்படுத்தும் காவல் துறையினர்!

தமிழ்நாட்டில் இன்று (ஜன. 9) முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஊரடங்கு பணிகளை காவல் துறையினர் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

tamil nadu lock down 2022
ஊரடங்குப் பணிகளை தீவிரப்படுத்தும் காவல் துறையினர்
author img

By

Published : Jan 9, 2022, 1:02 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் வேகமாக பரவி வரும் கரோனா மற்றும் ஒமைக்ரான் நோய் தொற்று காரணமாக கடந்த 6ஆம் தேதி முதல் தமிழ்நாடு அரசு இரவு நேர ஊரடங்கு பிறப்பித்தது. அதனைத்தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு நேர ஊரடங்கு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இன்று முழு ஊரடங்கை முன்னிட்டு சென்னை பெருநகர காவல் சரக எல்லைக்குள்பட்ட பகுதிகளில் 312 வாகன தணிக்கை சாவடிகள் அமைக்கப்பட்டு சட்ட ஒழுங்கு காவல் துறையினர் மற்றும் போக்குவரத்து ஆயுதப் படையை சேர்ந்த 10 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஊரடங்குப் பணிகளை தீவிரப்படுத்தும் காவல் துறையினர்

தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள அத்தியாவசிய தேவைக்காக செல்பவர்களை மட்டும் காவல் துறை அனுமதித்து வருகின்றனர்.

முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைத்து காவல் துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அரசின் உத்தரவை மீறி வெளியே செல்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வாகனங்களையும் பறிமுதல் செய்து வருகின்றனர்.

மேலும், மத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம் (UPSC & TNPSC) நடத்தும் தேர்வுகள், மற்ற போட்டித்தேர்வுகள் ஆகியவற்றில் பங்கேற்க செல்லும் நபர்கள் காவல்துறையினரிடம் தங்கள் தேர்வு நுழைவுச் சீட்டை (Hall Ticket) காண்பித்து செல்கின்றனர்.

அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியே வரும் நபர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து தகுந்த இடைவெளியை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், முகக்கவசம் அணியாமலும், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறி செல்பவர்கள் மீதும் உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: ஒன்றரை லட்சத்தை கடந்தது தொற்று பாதிப்பு; 327 பேர் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.