ETV Bharat / city

தவறை உணர்ந்து மைதானத்தை சீர்செய்த காவல்துறையினர் - இளைஞர்கள் நெகிழ்ச்சி! - கண்ணகி நகர்

சென்னை: இளைஞர்கள் உருவாக்கிய மைதானத்தை சேதப்படுத்திய காவல்துறையினர், பின்னர் மனம் வருந்தி இளைஞர்களிடம் நேரில் சென்று மன்னிப்பு கேட்ட நிகழ்வு நடந்தேறியுள்ளது.

ground
ground
author img

By

Published : Sep 2, 2020, 12:43 PM IST

சென்னை புறநகரில் அமைந்துள்ளது கண்ணகி நகர். இங்குள்ள இளைஞர்கள் சிலர் தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் கூறி காவல்துறையினர் அங்கு அடிக்கடி சென்று விசாரணையில் ஈடுபடுவது வழக்கம். அதேபோன்று கடந்த இரு நாட்களுக்கு முன்பு, கண்ணகி நகருக்கு விசாரணைக்காக காவல்துறையினர் சென்றனர்.

அப்போது குப்பைகள் நிறைந்த காட்டுப்பகுதியை, அப்பகுதி இளைஞர்கள் சுத்தம் செய்து வாலிபால் மைதானமாக மாற்றிய இடத்தை, காவல்துறையினர் சேதப்படுத்தி சென்றுள்ளனர். கண்ணகி நகர் இளைஞர்கள் பாதை தவறுகிறார்கள் என்று கூறும் காவல்துறையினரே, வாலிபால் மைதானம் உருவாக்கி, விளையாட்டில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் அவர்களை ஊக்குவிக்காமல், மைதானத்தை சேதப்படுத்தியது, அப்பகுதியினரிடையே வேதனையை உண்டாக்கியது.

துணை ஆணையர் விக்ரமனின் டிவிட்டர் பதிவு
துணை ஆணையர் விக்ரமனின் டிவிட்டர் பதிவு

பின்னர் இது தொடர்பாக அடையாறு துணை ஆணையர் விக்ரமனிடம் கண்ணகி நகர் இளைஞர்கள் சமூகவலைதள பக்கம் மூலமாக புகாரளித்தனர். இதையறிந்த துணை ஆணையர் விக்ரமன், உடனடியாக சம்பந்தப்பட்ட காவலர்களை கண்ணகி நகருக்கு அனுப்பினார். அங்கு சென்ற உதவி ஆய்வாளர் ஜெய்சங்கர் தன் சொந்த செலவிலேயே, சேதப்படுத்தப்பட்ட வாலிபால் மைதானத்தை சீர்செய்ததுடன், இளைஞர்களுக்கு தேவையான விளையாட்டு பொருட்களையும் வாங்கி கொடுத்தார்.

தவறை உணர்ந்து மைதானத்தை சீர்செய்த காவல்துறையினர்

மேலும், தங்களின் இச்செயலுக்காக இளைஞர்களிடம் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மன்னிப்பும் கேட்டுள்ளனர். அதோடு மட்டுமல்லாது, இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் அந்த மைதானத்திலேயே காவல்துறையினரும் இளைஞர்களுடன் சேர்ந்து வாலிபால் விளையாடி உற்சாகப்படுத்தியுள்ளனர். காவல்துறையினரின் இச்செயல் கண்ணகி நகர் இளைஞர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இந்த நல்லிணக்கத்தை ஏற்படுத்திய துணை ஆணையர் விக்ரமனுக்கு இளைஞர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். இச்செய்தியை துணை ஆணையர் விக்ரமன் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: போலீஸ் விசாரணையையடுத்து தற்கொலை செய்து கொண்ட நபர்; உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.