சென்னை: கிண்டியில் ரமடா பிளஸா என்ற தனியர் நட்சத்திர விடுதி ஒன்று இயங்கிவருகிறது. அங்கு இரவு முழுவதும் பப் எனப்படும் கேளிக்கை விருந்து நடத்தப்பட்டுவருகின்றது.
இந்நிலையில், நேற்றிரவு (டிசம்பர் 26) வாடிக்கையாளர் ஒருவர் கேளிக்கை விருந்தில் மது குடித்துவிட்டு பணம் தராமல் விடுதி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
அவரை விடுதியிலிருந்து வெளியே அழைத்துச் சென்று விடுதி ஊழியர்கள் தாக்கியதாகக் காவல் துறையினர் கண்ணெதிரே வாடிக்கையாளர் தாக்கப்படுவதும் அதனை காவல் துறையினர் கண்டுகொள்ளாமல் இருப்பது போன்று காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.
இது குறித்து கிண்டி காவல் துறையினர் தெரிவித்ததாவது, “நட்சத்திர விடுதியில் ஊழியர்கள் அந்நபரைத் தாக்கவில்லை. அவர்கள் அனைவரும் நண்பர்கள், ஒன்றாக பாரில் குடிக்கும்போது ஏற்பட்ட தகராறில் வெளியே வந்து அடித்துக்கொண்டனர்.
இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை செய்தபோது தாங்கள் நண்பர்கள்தான் எனக்கூறி சமாதானம் செய்துகொண்டனர்” எனத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஆட்டோவில் சென்ற நபரை கொலை செய்த கும்பலுக்கு வலைவீச்சு