சென்னையில் மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி, சட்டத்திற்கு புறம்பாக கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பவர்களை கைது செய்ய காவல் ஆணையர் உத்தரவிட்டார்.
இதையடுத்து, அனைத்துப் பகுதிகளிலும் உள்ள நுண்ணறிவுப் பிரிவு காவல் துறையினர், கள்ளச் சந்தையில் மது விற்பவர்கள் குறித்து உயர் அலுவலர்களுக்குத் தகவல் தெரிவித்து வந்தனர்.
லஞ்சம் வாங்கிய காவலர்
இந்நிலையில் சென்னை எழும்பூரில் நுண்ணறிவுப் பிரிவு காவலரான குமுதநாதன், எழும்பூரில் கள்ளச் சந்தையில் மது பாட்டில்கள் விற்பவர்கள் குறித்து உயர் அலுவலர்களுக்குத் தகவல் தெரிவிக்காமல், மது விற்பவர்களிடம் 500 ரூபாய் லஞ்சம் பெற்று வந்துள்ளார்.
தற்போது, குமுதநாதன் லஞ்சம் வாங்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இதனைத் தொடர்ந்து சட்டத்திற்குப் புறம்பாக மது விற்பனை செய்யும் நபர்களிடம் லஞ்சம் வாங்கிய காவலர் குமுதநாதனை பணியிடை நீக்கம் செய்து, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: உரிமத்தை புதுப்பிக்க லஞ்சம்: போக்குவரத்து கண்காணிப்பாளருக்கு சிறை