ETV Bharat / city

“பெண் பிள்ளைகளுக்கு எப்படி அளவெடுப்பாய்” - டைலரை தாக்கிய இளைஞர்கள்

பெண் பிள்ளைகளுக்கு அளவு எடுத்து ஜாக்கெட் தைத்த தையல் கடைக்காரரை தாக்கிய இரண்டு இளைஞர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

”பெண் பிள்ளைகளுக்கு எப்படி அளவெடுப்பாய்” - டைலரை தாக்கிய வாலிபர்கள்

author img

By

Published : Oct 12, 2022, 10:46 PM IST

சென்னை: அயனாவரத்தில் 5 ஆண்டுகளாக தையல் கடை நடத்தி வரும் அழகப்பன் (45) என்பவரின் கடைக்கு கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி வந்த 18 வயதுடைய இரு இளம் பெண்கள் அளவு ஜாக்கெட் இல்லாமல், ஆல்டரேஷன் செய்து தருமாறு கூறியதால் அவர்களுக்கு அளவெடுத்து ஜாக்கெட்டை ஆல்டர் செய்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து மறுநாள் அவரது கடைக்கு வந்த 20 வயதுடைய இரு இளைஞர்கள் ”பெண் பிள்ளைகளுக்கு எப்படி அளவெடுப்பாய்” எனக்கேட்டு அங்கிருந்த பிளாஸ்க் மூலமாக தலை மற்றும் முகத்தில் தாக்கியுள்ளனர். இதனால் அழகப்பனுக்கு ரத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் புற நோயாளியாக சிகிச்சை பெற்ற அழகப்பன் சம்பவம் தொடர்பாக அயனாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: இன்ஸ்டாவில் "டூயட்" ரீல்ஸ் பதிவிட்ட மனைவியை வெட்டிய கணவன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.