சென்னை: கொளத்தூர் பகுதியைச்சேர்ந்த 28 வயது திருமணமான இளம்பெண் கடை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். அவரது கணவர் வேலைக்குச்செல்லாமல் தினமும் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளார்.
இந்த நிலையில் 28 வயது இளம்பெண் வேலை செய்து வந்த கடையின் உரிமையாளர் அருணாச்சலம்(28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, பலமுறை தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளார். இந்த நிலையில் அருணாச்சலம் வெறித்தனமாக இளம்பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்துதல்களை செய்து வந்ததால், அப்பெண் அவரை விட்டுப்பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அருணாச்சலம் மீண்டும் மீண்டும் அப்பெண்ணை விடாமல் துரத்தியுள்ளார். அதற்கு அப்பெண் மறுப்புத் தெரிவித்ததால் தன்னுடன் நெருக்கமாக இருந்த வீடியோ மற்றும் போட்டோக்களை, அந்த இளம்பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்களின் அலைபேசிக்கு அனுப்பிவிடுவதாக அருணாச்சலம் மிரட்டி உள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் இதுகுறித்து வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தலைமறைவாக உள்ள அருணாசலத்தை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த பெண்ணை பாலியல் தொல்லை செய்ய முயன்ற நபர் கைது!