ETV Bharat / city

'பெட்ரோல், டீசல் விலையை திமுக நினைத்தால் இப்போதே குறைக்கலாம்' - அன்புமணி - anbumani ramadoss

தொடர் விலையேற்றத்தைக் கண்டுவரும் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையை திமுக நினைத்தால் இப்போதே குறைக்கலாம் என பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ்
பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ்
author img

By

Published : Jul 5, 2021, 6:21 PM IST

Updated : Jul 5, 2021, 10:22 PM IST

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் 19ஆவது நிழல் நிதிநிலை அறிக்கையை பாமக நிறுவனர் ராமதாஸ் முன்னிலையில் பொருளாளர் திலகபாமா இன்று (ஜூலை 5) வெளியிட்டார். பின்னர் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், "123 தலைப்புகளில் 481 பரிந்துரைகள் இந்த நிழல் பட்ஜெட்டில் உள்ளது. அடுத்த ஐந்தாண்டு காலத்தில் இதை நிறைவேற்றினால் தமிழ்நாடு வளர்ச்சி பாதையை நோக்கி பயணிக்கும்.

அரசின் வழிகாட்டி

ஆட்சியில் இருக்கும் புதிய அரசிற்கு வழிகாட்டியாக இந்த நிழல் நிதி அறிக்கை இருக்கும். தமிழ்நாட்டின் நிதிநிலை மோசமான நிலையில் இருக்கிறது. 2020-2021 ஆண்டில் 88 ஆயிரத்து 51 கோடி கடனாக அரசு பெற்றுள்ளது, வரும் ஆண்டில் இது அதிகரிக்கலாம்" என்று தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, அந்நிகழ்ச்சியில் பேசிய பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ், "பாமக ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக தொடர்ந்து செயல்படும். தமிழ்நாட்டின் உற்பத்தி திறன் குறைந்திருக்கிறது.

பாட்டாளி மக்கள் கட்சியின் 19ஆவது நிழல் நிதிநிலை அறிக்கை, ராமதாஸ், பாமக
பாமகவின் 19ஆவது நிழல் நிதிநிலை அறிக்கைை வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய ராமதாஸ்

நஷ்டத்தில் மின்துறை

இந்த 2020-21 ஆண்டில் அரசின் சொந்த வரி வருவாய் குறைந்திருக்கிறது. அதேபோல, அரசின் மொத்த வருவாய் 17% வீழ்ச்சியடைந்திருக்கிறது. அரசின் வருவாய் பற்றாக்குறை 3 மடங்கு அதிகரித்திருக்கும் நிலையில், அரசின் கடன் 10 லட்சம் ரூபாய் கோடியாக இருக்கும்.

தமிழ்நாடு மின்துறை நஷ்டத்தில் இருக்கிறது. கடந்த ஆண்டுகளில் மின் நிர்வாகம் சரியாக இல்லை. மாதாமாதம் மின் கட்டணம் செலுத்தும் முறையால், மக்களுக்கு 56 விழுக்காடு பணம் சேமிப்பாகும்.

60 மாவட்டங்கள் உருவாக்கம்

ஒரு மாவட்டத்தின் மக்கள் தொகை 12 லட்சமாக இருக்க வேண்டும். இதன் மூலம் தமிழ்நாட்டில் மொத்தமாக 60 மாவட்டங்கள் உருவாக்கப்படும். தமிழ்நாட்டை நான்கு பொருளாதார மண்டலங்களாக பிரித்து, பொருளாதார ஆணையர் பணியமர்த்தப்படுவார். பள்ளிகளில் காலை உணவு வழங்கப்படும்" என்று பாமகவின் நிழல் நிதி அறிக்கையில் இடம்பெற்றிருக்கும் அம்சங்கள் குறித்து தெரிவித்தார்.

பாமகவின் 19ஆவது நிழல் நிதிநிலை அறிக்கைை வெளியீட்டு நிகழ்ச்சி

நிகழ்ச்சிக்கு பின்னர் நடந்த செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி,,"ஊடகத்தினர் ஆதரவு அளித்தால், நாங்கள் அடுத்த ஐந்தாண்டு காலத்தில் சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வோம்.

3 ஆண்டுகளுக்கு கரோனா நீடிக்கும்

அண்ணா பல்கலைக்கழகத்தை உயர் சிறப்பு கல்வி நிறுவனமாக மாற்றினாலும் ஒன்றிய அரசின் இட ஒதுக்கீடு முறை அமல்படுத்தப்படும். இட ஒதுக்கீட்டிற்கு பாதிப்பு ஏற்படுமானால் ஒன்றிய அரசின் நிதி தேவையில்லை. பெட்ரோல், டீசல் விலையை இப்போதே குறைக்க வேண்டும், திமுக நினைத்தால் குறைக்கலாம்.

கரோனா பாதிப்பு அடுத்த மூன்றாண்டுகளுக்கு இருக்கும். அதை எதிர்கொள்ள பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தில் ஓராண்டுக்கு 100 கோடி தடுப்பூசி தயாரிக்கலாம்.

ஒன்றியத்தால் பயனில்லை

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை குறித்தும், செங்கல்பட்டு தடுப்பூசி மையம் குறித்தும் நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவேன். தமிழ்நாடு அரசு பொருளாதார குழு அமைத்ததற்கு வரவேற்பு தெரிவிக்கிறேன்.

மத்திய அரசின் பெயரை மாற்றுவதால் எந்த பயனும் இல்லை. தமிழ்நாட்டிற்கான திட்டங்களை மத்திய அரசிடம் இருந்து பெறுவதே முக்கியம். தென்பெண்ணையில் கர்நாடக அரசு கட்டியுள்ள அணையை உடைக்க வேண்டும். மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு கலந்துகொள்ளக் கூடாது.

10.5% இட ஒதுக்கீடு முக்கியம்

வன்னியர்களுக்கான 10.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்கு உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் எந்த தடையும் விதிக்கவில்லை. வழக்கு விசாரணையில் இருந்தாலும் தொடர்ந்து 69 விழுக்காடு இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளதை போல 10.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்.

10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு சாதி பிரச்சனை இல்லை, இது சமூக நீதிக்கான பிரச்சனை. இந்த இட ஒதுக்கீட்டிற்காக பாமக பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தியதுள்ளது" என்றார்.

இதையும் படிங்க: பழங்குடியின செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமி காலமானார்

Last Updated : Jul 5, 2021, 10:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.