ETV Bharat / city

கரோனா சிகிச்சையில் இருக்கும் ஜி.கே. மணி சபாநாயகருக்கு கடிதம் - பொன்னகரம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜிகே மணி

தான் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பதால், தன்னால் சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தில் பங்கேற்க இயலாது என பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ஜி.கே. மணி, சபாநாயகர் அப்பாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

PMK President GK Mani letter to TN Speaker Appavu, ஜிகே மணி சபாநாயகர் அப்பாவுக்கு கடிதம்
ஜி.கே. மணி சபாநாயகருக்கு கடிதம்
author img

By

Published : Feb 8, 2022, 10:14 AM IST

தருமபுரி: பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலத் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஜி.கே. மணிக்கு கடந்த சில நாள்களுக்கு முன் கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, அவர் சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார்.

தொற்று காரணமாக பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்ற அனைத்துக் கட்சி சட்டப்பேரவைத் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அவருக்குப் பதிலாக பாமக தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன் கலந்துகொண்டார்.

இந்நிலையில், நீட் விலக்கு தொடர்பான சிறப்புச் சட்டப்பேரவை இன்று (பிப்ரவரி 8) கூடியுள்ள நிலையில், முன்னதாகச் சட்டப்பேரவைத் தலைவருக்கு ஜி.கே. மணி நேற்று (பிப்ரவரி 7) கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், தான் கரோனா தொற்றால் உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த சில நாள்களாகச் சிகிச்சைப் பெற்றுவருவதாகவும் இதனால், நாளை (அதாவது இன்று) நடைபெற உள்ள சட்டப்பேரவைச் சிறப்புக் கூட்டத்தொடரில் கலந்துகொள்ள இயலாத நிலையில் உள்ளதாகவும் குறிப்பிட்டு கடிதம் அனுப்பியுள்ளார்.

இதையும் படிங்க: நீட் விலக்கு புதிய மசோதா: இன்று சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.