சென்னை: சென்னை தண்டையார்பேட்டை தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகள், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளுக்கு ஏடிஎம் அட்டையை உடனடியாக வழங்கிட வேண்டும். மாதமொருமுறை பிரத்யேகமாக மருத்துவ முகாம் நடத்தி மருத்துவ சான்றிதழ் வழங்கிட வேண்டும். வங்கிக் கணக்கு தொடங்க மாற்றுத்திறனாளிகளுக்காக மாதமொருமுறை சிறப்பு முகாம் நடத்த வேண்டும்.
அரசு துறையில் காலிப் பணியிடங்களை கண்டறிந்து உச்ச நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்ற வேண்டும். தனியார் துறை வேலைகளில் இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும். 40 விழுக்காடு மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித் தொகையை 3 ஆயிரத்திலிருந்து, 5 ஆயிரமாக உயர்த்தி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், தங்களின் கோரிக்கைகளை வட்டாட்சியரிடம் மனுவாக அளித்தனர். மாற்றுத்திறனாளிகளின் இந்த ஆர்ப்பாட்டத்தால், தண்டையார்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: நாடகக் கலைஞர்களுக்காக அரசுப் பேருந்தில் சலுகை - தமிழ்நாடு அரசு