ETV Bharat / city

மனைவியைக் கொன்றுவிட்டு நாடகமாடிய போட்டோகிராபர் கைது! - மனைவியைக் கொன்றுவிட்டு நாடகமாடிய போட்டோகிராபர்

சென்னையில் மனைவியை கழுத்தை நெறுக்கி கொலை செய்து விட்டு நாடகமாடிய போட்டோகிராபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மனைவியைக் கொன்றுவிட்டு நாடகமாடிய போட்டோகிராபர்

author img

By

Published : Nov 29, 2021, 5:07 PM IST

சென்னை: புரசைவாக்கம் வெள்ளாளர் தெருவைச் சேர்ந்தவர் வினோத்குமார் (33). அடையாறில் உள்ள போட்டோ ஸ்டூடியோவில் போட்டோகிராபராக பணியாற்றி வருகிறார்.

இவருடைய மனைவி ஹேமாவதி (24). இவர்களுக்கு கடந்த 2015ஆம் ஆண்டு பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஐந்து வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. திருமணமான ஆறு மாதங்களில் இருந்தே கணவன் - மனைவிக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.

கவுன்சிலிங் கொடுத்து அனுப்பிய போலீஸ்

குடும்பத்துடன் வினோத்குமார்
குடும்பத்துடன் வினோத்குமார்

இந்த நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கீழ்ப்பாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் கணவர் மீது ஹேமாவதி புகார் கொடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து கவுன்சிலிங் வழங்கி சமாதானப்படுத்தி இருவரையும் காவல் துறையினர் வீட்டுக்கு அனுப்பினர்.

இதையடுத்து கணவன் வினோத்குமாரின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த மனைவி ஹேமாவதி, அவரது செல்போனை பார்த்த போது பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் படங்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுதொடர்பாக அவரைக் கண்டித்த நிலையில் இருவருக்குள்ளும் சண்டை பூதாகரமானது.

பல பெண்களுடன் நெருக்கம்

மனைவியைக் கொன்றுவிட்டு நாடகமாடிய போட்டோகிராபர்
மனைவியைக் கொன்றுவிட்டு நாடகமாடிய போட்டோகிராபர்

குறிப்பாக வினோத் பல பெண்களுடன் வீடியோ காலில் பேசுவதும் அரை நிர்வாணத்துடன் வீடியோ கால் செய்வதையும் ஹேமாவதி கண்டுபிடித்தார். இந்நிலையில் நேற்று (நவ.28) ஹேமாவதி வழுக்கி விழுந்து விட்டதாக அவரது சகோதரருக்கு போன் செய்து வினோத் பேசியுள்ளார். தொடர்ந்து ஹேமாவதியின் சகோதரர் வீட்டுக்கு வருவதற்குள் அவரை வினோத்குமார் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

அவரை பரிசோதனை மருத்துவர்கள் ஏற்கெனவே அவர் இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். தொடர்ந்து தகவலறிந்து கீழ்ப்பாக்கம் போலீசார் மருத்துவமனைக்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது ஹேமாவதியின் உடலைப் பார்த்து மருத்துவர்கள் இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறியதால் வினோத் குமாரை தனியாக அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

மனைவியைக் கொன்றுவிட்டு நாடகம்

இந்த விசாரணையில் தன்னுடைய மனைவி ஹேமாவதியை கழுத்தை நெறித்துக் கொலை செய்ததாக வினோத்குமார் ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து கீழ்பாக்கம் போலீசார் அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் வேறு சில பெண்களுடன் அவர் தொடர்பில் இருந்ததும், ஆபாச வீடியோக்கள் போட்டு காண்பித்து ஹேமாவதியை துன்புறுத்தியதும் தெரிய வந்ததாக காவல் துறையினர் கூறியுள்ளனர்.

ஹேமாவதி
ஹேமாவதி

ஹேமாவதியின் சடலம் உடற்கூராய்வுக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் தற்போது வைக்கப்பட்டுள்ள நிலையில், தனது தங்கையை வரதட்சணை கொடுமை காரணமாக திருமணமானது முதல் வினோத்குமார் தொல்லை கொடுத்து வந்ததாகவும், வினோத்துக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததாகவும், அதற்கு இடையூறாக இருந்ததால் ஹேமாவதிைக் கொன்றுவிட்டு வினோத்குமார் நாடகமாடி உள்ளதாகவும் ஹேமாவதியின் உறவினர் நாகமணி என்பவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: திருப்பதி கோயில் மூத்தக் குருக்கள் டாலர் சேஷாத்ரி மறைவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.