ETV Bharat / city

பெட்ரோல் டீசல் விலை 5 நாட்களில் 4ஆவது முறையாக உயர்வு - சென்னை செய்திகள்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக அதிகரித்துள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலை 5 நாட்களில் 4ஆவது முறையாக அதிகரித்து சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.104.43-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.47-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல் டீசல்
பெட்ரோல் டீசல்
author img

By

Published : Mar 26, 2022, 10:56 AM IST

சென்னை: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக அதிகரித்துள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலை 5 நாட்களில் 4 வது முறையாக அதிகரித்துள்ளது. நேற்று பெட்ரோலின் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.103.67-க்கும், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.93.71-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், (மார்ச் 26) இன்றும் 76 காசுகள் உயர்த்தப்பட்டு, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.104.43-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.47-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பஞ்சாப், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடந்த போது பெட்ரோல், டீசல் விலை 137 நாட்களாக உயர்த்தப்படாமல் இருந்ததால் வாகன ஓட்டிகள் சற்றே நிம்மதியாக இருந்தனர்.

கிடுகிடு உயர்வு: உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் விலை ரூ.15 வரை படிப்படியாக உயர வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்களால் கணிக்கப்படுகிறது.

வரியைக் குறைக்க அறிவுறத்தல்: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு முன் திமுக தேர்தல் அறிக்கையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5 குறைக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆட்சிக்கு வந்தபின் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைத்தது. இதைத் தொடர்ந்து, மத்திய அரசு சிறப்புத் தீபாவளி அறிவிப்பாகப் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.5, டீசல் ரூ.10 ஆகக் குறைத்தது. அத்துடன் தற்போது மத்திய அரசு, மாநில அரசுகளையும் பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியைக் குறைக்க அறிவுறுத்தியது.

விலை உயர்வு குறித்து பொதுமக்களிடம் கேட்ட போது, பெட்ரோல், டீசல் விலை உயர்வினால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். மேலும், வாகன ஓட்டிகளிடம் கேட்ட போது, விலை உயர்வினால் கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும், பயணிகளிடம் அதிக பணம் வசூலிக்க முடியவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: ஒரே ஆண்டில் 14 லட்சத்துக்கும் அதிகமான சைபர் தாக்குதல்- மாநிலங்களவையில் அமைச்சர் தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.