ETV Bharat / city

சட்டவிரோதமாக செயல்படும் ஓய்வு விடுதிகளை மூடக்கோரிய மனு: வனத்துறை பதிலளிக்க உத்தரவு - ஒலி விழிப்புணர்வு இயக்கம்

சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் சட்டவிரோதமாக செயல்படும் ஓய்வு விடுதிகளை(Resorts) மூடக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழ்நாடு வனத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆணையம் பதிலளிக்க உத்தரவு
ஆணையம் பதிலளிக்க உத்தரவு
author img

By

Published : Jun 2, 2022, 2:46 PM IST

சென்னை: கோவையைச் சேர்ந்த ஒலி விழிப்புணர்வு இயக்கத்தின் நிறுவனர் கற்பகம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் சட்டவிரோதமாக செயல்படும் ஓய்வு விடுதிகளை(Resorts) மூடுவது தொடர்பாக மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், "1,411 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் 47 சட்டவிரோத ஓய்வு விடுதிகள் (Resorts) செயல்படுகின்றன என தகவல் உரிமைச் சட்டம் மூலம் தெரிய வந்துள்ளது.

தேசிய வன விலங்குகள் வாரியம், மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல் செயல்படும் இந்த சட்டவிரோத ஓய்வு விடுதிகள் காரணமாக, மலைப்பகுதி சுற்றுச்சூழல் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

வனப்பகுதிகளை பாதுகாக்க வேண்டுமானால், காளான் போல பரவி வரும் சட்டவிரோத ஓய்வு விடுதிகளை அப்புறப்படுத்த வேண்டும் எனக் கூறியுள்ள மனுதாரர், இந்த ஓய்வு விடுதிகளை மூடும்படி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும்" எனக் கோரியுள்ளார்.

இந்த மனு இன்று (ஜூன் 2) விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் முகமது சபிக் அடங்கிய அமர்வு, தமிழ்நாடு வனத்துறை, தேசிய வனவிலங்குகள் பாதுகாப்பு வாரியம், மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையம் ஆகியவை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 23ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: மோப்ப நாய் லூசிக்கு பணி நிறைவு விழா - கேக் வெட்டி மரியாதை

For All Latest Updates

TAGGED:

MHC Order
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.