ETV Bharat / city

தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறப்பதை எதிர்த்து வழக்கு - chennai district news

தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை வரும் 7 ஆம் தேதி முதல் திறக்க அனுமதிக்கும் அரசு உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Madras High Court challenging TamilNadu’s order to open Tasmac

author img

By

Published : May 5, 2020, 7:32 PM IST

கரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு, மூன்றாவது முறையாக மே 17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் மே 7 ஆம் தேதி முதல் டாஸ்மாக் மதுபானக் கடைகள் கட்டுப்பாட்டுப் பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரியும், கரோனா முழுமையாக இல்லாத நிலை எட்டியப் பிறகே அரசு மதுபானக் கடைகளைத் திறக்க வேண்டும் என உத்தரவிடக் கோரியும், திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், மதுபானக் கடைகள் முன் கூட்டம் கூடக்கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ள போதும், கடைகள் திறக்கப்பட்ட மாநிலங்களில் 2 கி.மீ, தூரத்திற்கு நீண்ட வரிசையில் மதுப்பிரியர்கள் நின்று மதுவை வாங்கிச் சென்றுள்ளனர். தமிழ்நாட்டிலும் மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாது.
அதேபோல, ஆறு அடி இடைவெளியுடன் கூடிய சமூக விலகலை பின்பற்ற முடியாது எனவும், 40 நாட்களுக்குப் பின் தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மதுபானக் கடைகளை திறப்பதாக அறிவித்துள்ளதன் மூலம், மக்கள் வேலைக்குச் செல்ல அரசு விரும்பவில்லை என்றே தெரிகிறது எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஒரு மாதமாக, தமிழ்நாட்டிலும் குற்றச் சம்பவங்கள் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ள நிலையில், தற்போது மதுபானக் கடைகளை திறக்க அனுமதிப்பதன் மூலம் குற்றச் சம்பவங்களும், விபத்துக்களும் அதிகரிக்கக்கூடும்.

மதுபான விற்பனை என்பது அத்தியாவசிய நடவடிக்கை அல்ல எனக் குறிப்பிட்டுள்ள மனுதாரர், ஏழை குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள், மதுபானம் வாங்க பணம் கேட்டு பெண்களை துன்புறுத்தவும் வாய்ப்புள்ளது. ஊரடங்கை நீட்டித்து, மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுக்கு முரணான வகையில், மதுக்கடைகளை திறக்க அனுமதிக்கும் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.