சென்னை: மண்ணடி பகுதியில் வசித்துவரும் 22 வயதுடைய பெண் ஒருவர் அப்பகுதியிலுள்ள ஒரு தனியார் உணவகத்தில் வேலை செய்துவருகிறார். இவர் கடந்த 14ஆம் தேதி மதியம் வேலைக்குச் செல்வதற்காக நடந்து சென்றுகொண்டிருந்தார்.
அப்போது அவர் பணிபுரியும் உணவகத்தில் வேலைசெய்யும் பஷீர் அகமது (38) என்பவர் அந்தப் பெண்ணை தகாத சொற்களால் பேசி தனியாக வருமாறு அழைத்துள்ளார்.
ஆனால் அந்தப் பெண் இவரை கண்டுகொள்ளாமல் வேகமாக நடந்துசென்றுள்ளார். அப்போது பஷீர் அகமது அந்தப் பெண்ணின் சேலையைப் பிடித்து இழுத்து கட்டாயப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
சிறையில் அடைப்பு
இதனால், அந்தப் பெண் அலறி அடித்துக்கொண்டு அங்கிருந்து ஓடியுள்ளார். பின்னர், இச்சம்பவம் குறித்து வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின்பேரில் பஷீர் அகமதுவைக் கைதுசெய்த காவல் துறையினர், அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: பெண் பணியாளருக்குப் பாலியல் தொல்லை: காவல் நிலைய எழுத்தர் பணியிடை நீக்கம்