ETV Bharat / city

கடற்கரையை இனி குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பயன்படுத்த அனுமதி?

author img

By

Published : Apr 10, 2021, 2:00 PM IST

சென்னை: கடற்கரைகளைக் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் பொதுமக்கள் பயன்படுத்த அனுமதிப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டுவருவதாக பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் கோ. பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Permission
Permission

சென்னை பாலவாக்கம் பகுதியில் மாநகராட்சி சார்பில் நடத்தப்படும் காய்ச்சல் முகாம், வீடு வீடாகச் சென்று நடத்தப்படும் பரிசோதனைகளைப் பார்வையிட்ட பின் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "அறிகுறிகள் தென்படும்போது தொடக்கத்திலேயே சோதனை செய்துகொண்டால் உயிரிழப்புகளைத் தடுப்பதோடு மற்றவர்களுக்குப் பரவுவதையும் தவிர்க்க முடியும்.

சென்னையில் தடுப்பூசி செலுத்த வேண்டிய 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் 10 லட்சம் பேர் உள்ளனர், அவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வந்தால் 10 நாள்களில் அனைவருக்குமே தடுப்பூசி செலுத்திவிட முடியும் முடிந்தவரை சீக்கிரம் தடுப்பூசி செலுத்திக்கொள்வது நல்லது.

45 வயதுக்கு மேற்பட்டவர்கள் 50 பேருக்கு குறையாமல் சேர்ந்து அணுகினால், அவர்கள் இருப்பிடத்திலேயே தடுப்பூசி முகாம்கள் ஒருங்கிணைக்கப்படும். ஒவ்வொரு வார்டிலும் காய்ச்சல் முகாம்களும், வீடு வீடாகச் சென்று சோதனையும் செய்யப்படுகிறது.

வீடுகளுக்குச் சோதனை செய்யவருபவர்களிடம் பொதுமக்கள் ஒளிவுமறைவின்றி ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சென்னையில் அடுத்த இருபது நாள்கள் நெருக்கடியான காலமாக இருக்கும். விதிமீறல்களுக்கு அபராதம் வசூலிப்பது வருவாய்க்காக இல்லை, மக்களிடையே கட்டுப்பாடு கொண்டு வரவே.

தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வந்தால் 10 நாள்களில் அனைவருக்குமே தடுப்பூசி

அதேபோல் கரோனா நம் வாழ்க்கையில் ஒரு அங்கம்போல் ஆகிவிட்டதால் அதனை முழுமையாக முடக்க முடியாது. கோயம்பேடு இல்லாமல் 80 சந்தைகள் சென்னையில் உள்ளன, குறிப்பாக அதிக கூட்டம் விடுமுறை நாள்களில் காசிமேட்டில் கூடுகிறது.

எனவே அந்தப் பகுதிதான் மிகவும் சவாலாக இருக்கிறது. மீன்வளத் துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தி அந்தப் பகுதியில் கூட்டம் குறைக்க முடிவெடுக்கப்படும். மெரினா கடற்கரை உள்ளிட்ட மக்கள் கூடும் இதர இடங்களில் கட்டுப்பாடு கொண்டுவருவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுவருகிறது" எனத் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.