ETV Bharat / city

அச்சுறுத்தும் டெங்கு...அச்சத்தில் மக்கள்... - சென்னை மாநகராட்சி

சென்னை: கரோனா முடிவதற்குள் டெங்கு காய்ச்சலால் அஞ்சிக்கிடக்கின்றனர் மக்கள். கொசு உற்பத்தியை விரைவாக கட்டுப்படுத்தி டெங்கு உள்ளிட்டவற்றிலிருந்து தங்களை காக்க வேண்டுமென்றும் தலைநகர மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது பற்றிய சிறப்பு செய்தித்தொகுப்பு...

fever
fever
author img

By

Published : Aug 4, 2020, 10:01 PM IST

கரோனாவின் கோரப் பிடியில் இருந்து தலைநகர் சென்னை தற்போதுதான் மெல்ல மெல்ல மீண்டு வருகிறது. கடந்த மாதங்களில் ஏற்பட்ட தொடர் கரோனா உயிரிழப்புகளால் உறைந்து போயிருந்தவர்களுக்கு, சென்ற மாதம் மூன்று வயது குழந்தை ஒன்று டெங்குவிற்கு பலியாகியிருப்பது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதோடு கடந்த காலங்களில் ஏராளமானோர் டெங்குவுக்கு பலியானதையும் நினைத்து கடும் அச்சத்தில் இருக்கின்றனர் சென்னை மக்கள். மழை பெய்ய தொடங்கி உள்ளதால், மாநகரின் பல இடங்களில் கொசுக்கள் அதிகரித்து காணப்படுகின்றன. குறிப்பாக, கொசுவோடு இணைந்த வாழ்வு கொண்ட கூவக்கரையோர எளிய மக்கள், ஆகாய தாமரை படர்வதாலேயே கொசுக்கள் அதிகளவில் உருவாவதாகவும், சாலைகளில் தேங்கும் மழை நீராலும் கொசுக்கள் வருவதாக கூறுகின்றனர்.

அச்சுறுத்தும் டெங்கு...அச்சத்தில் மக்கள்...

மழைக்காலங்களில் மழை நீரோடு கசடுகள் அடித்து வருவதால், அவை தேங்கி அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் வெளியேறுவதால் கொசு மட்டுமின்றி பாம்பு உள்ளிட்டவையும் வீடுகளுக்குள் புகுந்து விடுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். கொசு மருந்து தெளிப்பதாக வெறும் கணக்குக்காக வந்து கையெழுத்து வாங்கிச் செல்லும் மாநகராட்சி ஊழியர்கள், எதையுமே செய்வதில்லை என்றும் கோபத்துடன் கூறுகின்றனர்.

இதுதொடர்பாக, சென்னை மாநகராட்சி ஆணையரிடம் நாம் கேட்டபோது, கூவமாற்றில் ஆகாயத் தாமரையை பொதுப் பணித்துறையுடன் இணைந்து சுத்தம் செய்து வருவதாகத் தெரிவித்தார். மேலும், 500 வீடுகளுக்கு ஒரு களப் பணியாளர் என நியமிக்கப்பட்டு, டெங்கு, மலேரியா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும் ஆணையர் கூறினார்.

நவம்பர், டிசம்பர் மாதங்களில் தான் மழை பெய்து கொசு உற்பத்தி அதிகரிக்கும் என்றாலும், அதற்கான பணிகளை தற்போதே தொடங்கி விட்டதாகவும் அவர் தெரிவித்தார். கரோனாவால் வாழ்வாதாரம் இழந்து ஒரு நிலைக்கு வரவே போராடி வரும் தங்களுக்கு, டெங்கு போன்ற இன்னொரு பேரிடரை தாங்கிக்கொள்ள ஆற்றல் இல்லை என்பதால், கொசு உற்பத்தியை விரைவாக கட்டுப்படுத்தி சுகாதார வாழ்விற்கு மாநகராட்சி நிர்வாகம் உறுதி அளிக்க வேண்டும் என்பதே மாநகர மக்களின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க: உதயநிதி ஸ்டாலின் பொய் பரப்புகிறார் - அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.