ETV Bharat / city

'பொதுமக்கள் அச்சமின்றி கடைகளில் பொருள்களை வாங்கிச் செல்லலாம்' - vanigar sangam

தமிழ்நாடு முழுவதும் உள்ள வணிகர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு அதற்கான சான்றிதழ் வணிகர் சங்கம் சார்பில் வழங்கப்படுவதால் பொதுமக்கள் அச்சமின்றி கடைகளில் பொருள்களை வாங்கிச் செல்லலாம் என்று வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா உறுதி அளித்துள்ளார்.

vikramaraja, vikramaraja vanigar sangam
vikramaraja, vikramaraja vanigar sangam
author img

By

Published : Jul 5, 2021, 3:15 PM IST

சென்னை தலைமை செயலகத்தில் இன்று(ஜூலை.5) முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்த தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா, முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.23 லட்சத்து 10 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கினார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "தமிழ்நாடு முழுவதும் ஒரே மாதிரியான தளர்வுகளை பிறப்பித்ததற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தோம். தற்போது உணவகங்கள் இரவு 8 மணிவரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதனை 10 மணி வரை நீட்டிக்க கோரிக்கை விடுத்துள்ளோம்.

கரோனா தொற்று மூன்றாவது அலையை தடுக்க, தமிழ்நாடு முழுவதும் உள்ள வணிகர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு அதற்கான சான்றிதழ் வணிகர் சங்கம் சார்பில் வழங்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் அச்சமின்றி கடைகளில் பொருள்களை வாங்கிச் செல்லலாம்" என்றார்.

இதையும் படிங்க: கூடுதல் நேரம் கடைகளைத் திறக்க அவகாசம் வேண்டும் - விக்கிரமராஜா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.