சென்னையில் கரோனா வைரஸ் பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது.
இதனால் கரோனா கண்டறியும் முகாம் பி.சி.ஆர் மாதிரி சோதனைகள் குறைந்து வருகின்றன. நேற்று(ஆக.14) மட்டும் சென்னையில் மொத்தம் 498 காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் செயல்பட்டன.
அவற்றில் 23 ஆயிரத்து 116 பேர் பரிசோதனை செய்துகொண்டனர். ஒவ்வொரு மருத்துவ முகாம்களிலும் விழுக்காட்டின் அடிப்படையில் 46 பேர் வீதம் பரிசோதனை செய்துகொண்டனர்.
அவர்களில் ஓராயிரத்து 400 பேருக்கு பி.சி.ஆர் எனப்படும் கரோனா மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. கடந்த மாதத்தை விட இந்த எண்ணிக்கை மிகக் குறைவாகும்.
மேலும் சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 13 ஆக குறைந்துள்ளது. அதன்படி 8ஆவது மண்டலத்தில் மூன்று கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளும், 10ஆவது மண்டலத்தில் இரண்டு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளும், 13 மற்றும் 14ஆவது மண்டலங்களில் தலா ஒரு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியும், 15ஆவது மண்டலத்தில் மூன்று கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளும் குறைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: தனிமைப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 லட்சம் - சென்னை மாநகராட்சி ஆணையர்