சென்னை மெரினா கடற்கரை பகுதியில் மீன் வியாபாரிகளை ஒழுங்குபடுத்துவது, நடைபாதை வியாபாரிகள் சட்டத்தை அமல்படுத்தவது தொடர்பான வழக்கில், புயலில் சேதமடைந்த மெரினா லூப் சாலையில் இருந்து பெசன்ட் நகரை இணைக்கும் சாலையை மீண்டும் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக பட்டினப்பாக்கம் - பெசன்ட் நகரை இணைக்கும் இந்தச் சாலையை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்திருந்தது.
இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள் வினித் கோத்தாரி, சுரேஷ்குமார் அமர்வு, பட்டினப்பாக்கம் - பெசன்ட் நகர் இணைக்கும் சாலை அமைப்பது தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை நான்கு வாரங்களில் தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 20ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
இதையும் படிங்க: துப்புரவு தொழிலாளர்களைப் பாதுகாக்க வேண்டும் - ஆணையரிடம் மனு