ETV Bharat / city

பாஸ்போர்ட் பரிசீலனை விவரங்களை ஸ்கைப்பில் அழைக்கலாம்! - Regional Passport Office Chennai

அவசரமான பாஸ்போர்ட் விண்ணப்பங்களை பரிசீலிப்பது தொடர்பாக, விண்ணப்பதாரர்கள் ஸ்கைப் மூலம் அழைக்கலாம் என சென்னை பிராந்திய பாஸ்போர்ட் அலுவலகம் அறிவித்துள்ளது.

பாஸ்போர்ட்
பாஸ்போர்ட்
author img

By

Published : Aug 6, 2020, 8:59 AM IST

இது குறித்து சென்னை பிராந்திய பாஸ்போர்ட் அலுவலகம் செய்திக் குறிப்பில், "கரோனா வைரஸ் பரவல் காரணமாக சென்னை பிராந்திய பாஸ்போரட் அலுவலகம் மூடப்பட்டுள்ளது.

இருப்பினும், நிலுவையில் உள்ள அவசரமான பாஸ்போர்ட் விண்ணப்பங்களை பரிசீலிப்பது தொடர்பாக விண்ணப்பதாரர்கள் ஸ்கைப் மூலம் வீடியோ அழைப்பு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வசதி நேற்று (ஆகஸ்டு 5) முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது. அனைத்து வேலை நாள்களிலும் காலை 10 மணி முதல் பிற்பகல் 12.30 வரை, Regional Passport Office Chennai என்ற ஸ்கைப் ஐடியில் விண்ணபத்தாரர்கள் தொடர்பு கொள்ளலாம்.

குறிப்பாக இந்த வசதி பொது விசாரணைக்கு பொருந்தாது, அவசர விசாரணைக்கு மட்டுமே. இது தொடர்பான சந்தேகங்களுக்கு 1800-258-1800 என்ற டோல் ஃப்ரீ எண்ணை தொடர்பு கொள்ளலாம். rpo.chennai@mea.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் தகவல் அனுப்பலாம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'மாணவிகளுக்குப் பட்டப்படிப்பு முடித்தவுடன் பாஸ்போர்ட் வழங்கப்படும்' - ஹரியானா முதலமைச்சர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.