சென்னை: அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு நிரந்தர சின்னங்கள் ஒதுக்க வகை செய்யும், தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீட்டு உத்தரவை அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என அறிவிக்க கோரி தமிழ்நாடு முற்போக்கு மக்கள் கட்சி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இதுகுறித்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு தாக்கல் செய்த பதில் மனுவில், “ஒவ்வொரு தேர்தலிலும் கட்சிகளுக்கு புதிய சின்னங்கள் ஒதுக்கீடு செய்வது வாக்காளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும்.
விரைந்து வாக்குப்பதிவை நடத்தவும், வாக்காளர்களின் வசதிக்காகவும் சின்னங்கள் பயன்படுத்தப்படுகின்றன. சின்னங்களை பிரபலப்படுத்த அரசு நிதியையோ, அரசு இயந்திரத்தையோ பயன்படுத்தினால், சின்னத்தை திரும்பப் பெறுவது, தேர்தலை ரத்து செய்வது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என அந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை விசாரித்த நீதிபதி வழக்கு விசாரணை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'அடையாள அட்டை இல்லாத மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் கரோனா நிவாரண உதவித்தொகை '