சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணையத்தில், தேர்தல் ஆணையர் பழனிகுமார் தலைமையில் நடைபெற்றது.
ஏற்கனவே தமிழ்நாட்டில் தரம் உயர்த்தப்பட்ட மாநகராட்சிகளையும் சேர்த்து மொத்தம் 21 மாநகராட்சிகள் உள்ளன. இதில் 11 மாநகராட்சி மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
தேர்தலை ஒரே கட்டமாக நடத்த கோரிக்கை
இதில் சென்னை, தாம்பரம் மாநகராட்சிகள் ஆதி திராவிடர் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ஆவடி மாநகராட்சி ஆதிதிராவிடர் பொதுப் பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் பெருவாரியான கோரிக்கையாக தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டுமெனவும், கரோனா நெறிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டுமெனவும், பதற்றமான வாக்குச் சாவடிகளில் துணை ராணுவத்தினரைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டுமெனவும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இதையும் படிங்க: தலைக்கவசத்துடன் கூடிய தபால் பெட்டி வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய அஞ்சல் துறையினர்!