ETV Bharat / city

இலவச அறிவிப்புகளை வாரி இறைக்கும் கட்சிகள்...நடைமுறை சாத்தியமா? - திமுக

சென்னை: காலங்காலமாக திமுகவும் அதிமுகவும் பல்வேறு இலவச திட்டங்களை தங்களின் தேர்தல் அறிக்கையில் கூறி வருகின்றன. இருப்பினும் அதற்கான நிதி ஆதாரங்கள் குறித்தோ, அத்திட்டங்களின் நீடித்த செயல்பாடு குறித்தோ எந்த உத்தரவாதமும் அளிப்பதில்லை. இந்நிலையில், அவ்வாறான திட்டங்கள் நடைமுறையில் சாத்தியமா என்பதை பற்றி ஆராய்கிறது இத்தொகுப்பு.

admk dmk
admk dmk
author img

By

Published : Mar 18, 2021, 5:52 PM IST

தேர்தல் வந்தாலே அரசியல்வாதிகள் இலவச அறிவிப்புகளை மழையாய் பொழிவது வழக்கம். அதுபோல், வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் வாழ்வா சாவா போராட்டத்தை எதிர்கொண்டுள்ள இருபெரும் கட்சிகளும், போட்டி போட்டு கவர்ச்சிகர அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. குறிப்பாக பெண்களைக் குறி வைத்து அதிக திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என திமுகவும், 1,500 ரூபாய் என அதிமுகவும் கூறியுள்ளன. மேலும், வாஷிங் மெஷின், பேருந்தில் கட்டண சலுகை, ஆண்டுக்கு 6 சமையல் சிலிண்டர் இலவசம் உள்ளிட்டவற்றையும் அதிமுக அறிவித்துள்ளது.

திமுகவோ, கரோனா நிவாரணமாக குடும்ப அட்டைக்கு 4 ஆயிரம் ரூபாய், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம், பால் விலை குறைப்பு, மாநகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம், கூட்டுறவு நகைக்கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன், மாணவர்கள் கடன் தள்ளுபடி, இலவச டேப்லெட், இணையதள சேவை உள்ளிட்டவை வழங்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளது.

கடந்த காலங்களில் டிவி, லேப்டாப், மிக்சி, கிரைண்டர், ஆடு, கோழி என இலவச அறிவிப்புகளே கட்சிகளின் தேர்தல் வெற்றிக்கு முக்கிய பங்காற்றின. அதுபோல், இம்முறையும் ஏதாவது நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் இலவசங்கள் வாரி இறைக்கப்பட்டுள்ளன. இம்மாதிரியான அறிவிப்புகளால் வறுமை ஓழியுமா, பொருளாதார ஏற்றத்தாழ்வு குறையுமா, பெண்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுக்குமா என்ற கேள்விகள் ஒருபுறமிருந்தாலும், முதலில் இது நடைமுறை சாத்தியமா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

’மாநிலத்தின் தற்போதைய கடன் 5.70 லட்சம் கோடி ரூபாய்’

கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தின் கடன் சுமை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் உள்ளபடி, மாநிலத்தின் தற்போதைய கடன் 5.70 லட்சம் கோடி ரூபாய். 2016 ஆம் ஆண்டு ஜிஎஸ்டி அமலாக்கத்திற்குப் பிறகு மாநில நிதி சுயாட்சி என்பதே இல்லாமல் போய்விட்டது. நிதிக்காக மத்திய அரசையே அதிகளவில் நம்பியிருக்க வேண்டியுள்ளது. மத்திய அரசு வழங்கும் வரிப்பங்கீடு, உதவி மானியம் ஆகியவையும் படிப்படியாகக் குறைந்து வருகிறது. இதைத்தான், 15 ஆம் நிதிக்குழு அறிக்கைப்படி தமிழகத்திற்கு வழங்கப்படும் நிதி ஒதுக்கீடு குறைந்துள்ளதாக, சட்டப்பேரவையில் கூறினார், துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம்.

ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 15 ஆம் நிதிக்குழு பங்கீடு மூலம் மத்திய அரசு வழங்கும் உதவித்தொகையும் குறைந்துள்ளது. இதுபோதாதென்று, மத்திய அரசு நேரடி வரிகளை உபரி வரியாகவும், கூடுதல் வரியாகவும் மாற்றி வருகிறது. இதனால் மத்திய வரித் தொகுப்பிலிருந்து மாநிலங்களுக்கு வழங்கும் பங்கு குறைகிறது. அதேநேரத்தில் மத்திய அரசின் வரி வருவாய் உயர்ந்து வருகிறது. இதற்கிடையே கரோனா தொற்று மாநிலத்தின் வருவாயை கடுமையாக பாதித்துள்ளது. அப்பாதிப்பை சமாளிக்க தமிழக அரசு 13,352 கோடி ரூபாய் செலவழித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

’இலவசங்களுக்கு நிதி எங்கே? கட்சிகள் தெரிவிப்பதே இல்லை’

பெட்ரோல், டீசல் மீதான வரி, டாஸ்மாக் மதுபான வரி, பத்திரப் பதிவு வரி, உள்ளூர் வரிகள் ஆகியவையே மாநிலத்தின் பிரதான நிதி ஆதாரங்களாக உள்ளன. இந்நிலையில், பெட்ரோல், டீசல் மீதான வரி 5 ரூபாய் வரை குறைக்கப்படும் என திமுகவும், குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுகவும் அறிவித்துள்ளன. மதுக்கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் எனவும் இருகட்சிகளும் தெரிவித்துள்ளன.

கடந்த தேர்தலில் வீடுகளுக்கு வழங்கப்படும் முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசம் என அறிவிக்கப்பட்டது. தற்போது மின்வாரியம் 1,60,000 கோடி ரூபாய் கடனில் உள்ளது. தமிழக போக்குவரத்துத்துறையோ சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் தத்தளிக்கும் சூழலில், ஊழியர்களுக்கு நீண்ட நாட்களாக ஊதிய உயர்வு, ஓய்வூதிய பலன்கள் உள்ளிட்டவை வழங்கப்படாமல் உள்ளன. இந்நிலையில், பெண்களுக்கு மாநகரப் பேருந்துகளில் சலுகைகள் வழங்குவது எந்தளவிற்கு சாத்தியம் என்பது தெரியவில்லை.

’இலவசங்களே அதிமுக திமுக வெற்றிக்கு முக்கிய பங்காற்றின’

தற்போது தமிழக அரசின் 8 சமூக பாதுகாப்பு திட்டங்கள் மூலம், சுமார் 33 லட்சம் பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இது மேலும் உயர்த்தப்படும் என திமுக அதிமுக அறிவித்துள்ளன. பல்வேறு இலவச, கவர்ச்சிகர திட்டங்களை அறிவிக்கும் கட்சிகள், அதற்கான நிதி ஆதாரத்தை எங்கிருந்து திரட்டுவது என்பது குறித்து விவரிப்பதேயில்லை. மாணவர்களுக்கு சத்துணவு, இலவச சைக்கிள் உள்ளிட்ட பாராட்டத்தக்க திட்டங்கள் பல இருந்தாலும், அண்மைக்காலங்களில் வெறும் வாக்குளை குறிவைத்தே இலவசங்களும், சலுகைகளும் அறிவிக்கப்படுவதாக குற்றச்சாட்டும் உள்ளது.

மாநிலத்தின் நிதிப்பற்றாக்குறை உயர்வால், கட்சிகளின் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது சாத்தியக்குறைவுதான் என்கிறார் மூத்தப் பத்திரிகையாளர் சிவக்குமார். மேலும், பல இலவச பொருட்களின் தரம் மோசமானதாக உள்ளது எனவும், தேர்தலுக்கு பின் ஒருசிலருக்கு இலவசங்களை வழங்கிவிட்டு, ஒட்டுமொத்தமாக வழங்கியதாக கணக்கு காட்டுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். இது போன்ற திட்டங்களால் வறுமை ஒழிவதாக கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் சிவக்குமார் கூறினார்.

இலவசங்களால் சமூகத்தில் மாற்றம் நிகழ்ந்துள்ளதா?

ஆனால், இதுபோன்ற திட்டங்கள் உண்மையிலேயே அடித்தட்டு மக்களுக்கு மிகப்பெரிய அளவில் பயனளிப்பதாக மற்றொரு வாதமும் வைக்கப்படுகிறது. கரோனா காலத்தில் ஏராளமான குடும்பங்கள் பாதிக்கப்பட்ட நிலையில், நியாயமாக அவர்களுக்கு சேர வேண்டிய பணத்தையே அரசு கொடுத்ததாக கூறும் பொருளாதார நிபுணரும், பேராசிரியருமான வெங்கடேஷ் ஆத்ரேயா, அதேநேரம் அரசியல் கட்சிகள் வாக்குறுதி வழங்கும் போது நிதி ஆதாரத்தையும் கோடிட்டு சொல்ல வேண்டும் என்கிறார். கல்வியையும், சுகாதாரத்தையும் தனியார் மயமாக்கிவிட்டு மக்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பதால் வறுமை ஒழியாது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவிக்கிறார்.

’இடைக்கால இலவசங்களால் நமக்கே சுமை என மக்கள் உணர வேண்டும்’

நிதி பற்றாக்குறை எனக்கூறி அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பஞ்சப்படியை நிறுத்திய அதிமுக அரசுதான், தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் கூட்டுறவுச் சங்கங்களில் பெறப்பட்ட 12 ஆயிரத்து 110 கோடி ரூபாய் மதிப்பிலான வேளாண் கடன்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இப்படி, நிதி ஆதாரம் குறித்த எந்தத் தெளிவும் இன்றி, இடைக்காலமாக அறிவிக்கும் திட்டங்களால் பிற்காலத்தில் நமக்குதான் சுமை என்பதை மக்களும் கவனிக்க வேண்டும். கட்சிகளும் கவனமுடன் அணுக வேண்டும்.

இதையும் படிங்க: வீட்டு இல்லத்தரசிகளுக்கு ஊதியம்; நாம் தான் முதலில் சொன்னோம் - கமல்ஹாசன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.