இது குறித்து அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "சென்னை மாநகராட்சிக்குட்பட்ட கோவிட்-19 சிகிச்சை மையங்களில் சித்த மருத்துவ முறையில் சிகிச்சை வழங்குவது நல்ல பலன்களை கொடுக்கிறது. இதனால் பல்வேறு மையங்களுக்கு சித்த மருத்துவ முறையை விரிவுபடுத்த சென்னை மாநகராட்சி ஏற்பாடுகளை செய்து வருகிறது.
கூடுதலாக, சுகாதாரத் துறையினருடன் இணைந்து, மேலும் சில சித்தா சிகிச்சை மையங்களை துவங்கவும் சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.