ETV Bharat / city

மருத்துவப் படிப்பு இட ஒதுக்கீடு வழக்கு - சுகாதாரத் துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு! - chennai high court news

மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாதது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், மத்திய சுகாதாரத் துறை செயலாளர், தமிழ்நாடு தலைமைச் செயலாளர் உள்ளிட்ட 9 பேர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Panel not form for medical reservation, Dmk move contempt, notice to state and central, நீதிமன்ற செய்திகள், சென்னை உயர் நீதிமன்ற செய்திகள், court news, chennai high court news, மருத்துவப் படிப்பு இட ஒதுக்கீடு
Panel not form for medical reservation Dmk move contempt
author img

By

Published : Mar 1, 2021, 3:29 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வழங்கக்கோரி திமுக, அதிமுக, தமிழ்நாடு அரசு, திராவிடர் கழகம், மதிமுக சார்பில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து மத்திய, மாநில அரசுகளும், மருத்துவ கழக அலுவலர்களும் முடிவெடுக்க வேண்டுமென 2020 ஜூலை 27ஆம் தேதி தீர்ப்பளித்தது.

இது தொடர்பாக, மத்திய பொதுச் சுகாதார பணிகள் இயக்குநர், மத்திய சுகாதாரத் துறை, தமிழ்நாடு சுகாதாரத் துறை செயலாளர், இந்திய மருத்துவ கழகம், இந்தியப் பல் மருத்துவ கழக செயலாளர்கள் அடங்கிய குழுவை அமைத்து, இறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த உத்தரவின் அடிப்படையில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் எத்தனை விழுக்காடு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடாக வழங்குவது என்பது குறித்து மத்திய அரசு மூன்று மாதங்களில் அறிவிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இச்சூழலில், உயர் நீதிமன்ற உத்தரவு அமல்படுத்தப்படவில்லை எனக் கூறி மாநிலங்களவை உறுப்பினரும், திமுக செய்தித் தொடர்பாளருமான டி.கே.எஸ் இளங்கோவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அதில், 2020 செப்டம்பர் மாதம் மத்திய சுகாதாரத் துறைச் செயலர் அமைத்த குழுவில், தமிழ்நாடு சுகாதாரத்துறைச் செயலர் மற்றும் பொதுச் சுகாதாரத் துறை இயக்குநர் ஆகியோரை சேர்க்கவில்லை எனக் குற்றஞ்சாட்டியுள்ளார். நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியும் இதுவரை பதில் அளிக்காததால், மத்திய சுகாதாரத் துறை செயலாளர், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை செயலாளர், தமிழ்நாடு தலைமைச் செயலாளர், தமிழ்நாடு சுகாதாரத் துறை செயலாளர் உள்பட 9 பேர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, மத்திய - மாநில சுகாதாரத் துறை செயலாளர்கள் உள்ளிட்ட 9 பேரும் இந்த மனுவுக்குப் பதிலளிக்கும்படி உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.