சென்னை: மின்வாரியத்தில் நிரப்பப்படாமல் உள்ள அனுமதிக்கப்பட்ட காலிப்பணியிடங்கள், நிரப்ப உள்ள புதிய பணியிடங்களை அட்டவணைப்படுத்தி அறிக்கை அனுப்ப ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உதவியாளர், கணக்கீட்டாளர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 56ஆயிரம் பணியிடங்கள் உடனே நிரப்பப்பட வேண்டிய தேவை உள்ளதாக, ஏற்கெனவே அமைச்சர் தெரிவித்து இருந்தார்.
கடந்த ஆண்டு புதிய பணியாளர்களைத் தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகிய நிலையில், கரோனா காரணமாக ஆள் தேர்வு நடைபெறவில்லை.
இந்த நிலையில், புதிய அரசு அமைந்து உள்ள நிலையில், பழைய அரசாணையை ரத்து செய்து, புதிய அரசாணை விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: மின்வாரிய பணியாணை வழக்கு! - வாரியத்தலைவர் பதிலளிக்க உத்தரவு!