ETV Bharat / city

மலைப்பகுதி டாஸ்மாக் கடைகளை மூட நேரிடும் : உயர் நீதிமன்றம் - Tourist Place

மலைப்பகுதிகள் உள்ள டாஸ்மாக் கடைகளில் கண்ணாடி பாட்டில்களை திரும்பப் பெறுவது தொடர்பான திட்டத்தை அரசு வகுக்காவிட்டால், அங்குள்ள டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட நேரிடும் என டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவிட நேரிடும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

author img

By

Published : Apr 19, 2022, 1:52 PM IST

சென்னை: வன பகுதியில் பிளாஸ்டிக் பொருள்கள், மதுபாட்டில்கள் குவிந்து கிடப்பது தொடர்பாக இணையத்தில் வெளியான காணொலிக் காட்சி அடிப்படையில் தானாக முன்வந்து எடுத்த வழக்கு நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் அடங்கிய அமர்வு முன்பு நேற்று (ஏப். 18) விசாரணைக்கு வந்தது.

அப்போது, மலைப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கண்ணாடி பாட்டில்களில் மதுபானங்களை அருந்திவிட்டு வனப்பகுதிகளில் வீசிச் செல்வதால், அவற்றை விலங்குகள் மிதிக்கும்போது காயமடைவதாகவும், அடுத்த மூன்று மாதங்களில் அவை இறந்து விடுகின்றன என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

இந்தக் கண்ணாடி பாட்டில்களை திரும்பப் பெறுவது தொடர்பாக ஏப்ரல் 25ஆம் தேதிக்குள் திட்டத்தை வகுக்கும்படியும், மாற்று திட்டம் வகுக்கும்படியும் டாஸ்மாக் நிர்வாகத்துக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், தவறினால் மலைப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட நேரிடும் எனவும் எச்சரித்தனர்.

இதையும் படிங்க: 'ஜெயலலிதாவிற்கு வெளிநாட்டு சிகிச்சை தேவைப்படவில்லை - அப்பல்லோ மருத்துவர்கள் வாக்குமூலம்!'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.