ETV Bharat / city

ஈபிஎஸ் VS ஓபிஎஸ்... A to Z தகவல்கள்... - ADMK tussle

அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவு முதல், பொதுக்குழுவுக்கு கோரிய பாதுகாப்பு வரை இன்று (ஜூன் 20) நடந்த முக்கிய நிகழ்வுகளை காணலாம்.

ops-vs-eps-leadership-tussle-in-aiadmk
ops-vs-eps-leadership-tussle-in-aiadmk
author img

By

Published : Jun 20, 2022, 9:51 PM IST

Updated : Jun 20, 2022, 10:20 PM IST

பொதுக்குழுவை ஒத்திவைக்க ஈபிஎஸ்க்கு ஓபிஎஸ் கடிதம்

அதிமுக பொதுக்குழுவை ஒத்திவைக்கலாம் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் , இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதிமுக பொதுக்குழு திட்டமிட்டபடி நடைபெறும்

அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் 23ஆம் தேதி திட்டமிட்டபடி நடைபெறும் என முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளருமான கே.பி. முனுசாமி தெரிவித்தார்.

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு அளிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் மனு

சென்னையில் வரும் 23ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

'சசிகலாவுடன் இணைவதற்கு ஓபிஎஸ் தயாராக இருக்கிறார்'

ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவுடன் இணைவதற்கு தயாராக இருப்பதாக, சென்னை வடக்கு மாவட்ட துணை செயலாளரும், சசிகலா ஆதரவாளருமான ஆவின் வைத்தியநாதன் தெரிவித்தார்.

'ஈபிஎஸ் ஏக மனதாக தேர்வு செய்யப்படுவார்'

எடப்பாடி பழனிசாமி ஒற்றை தலைமையாக ஏக மனதாகத் தேர்வு செய்யப்படுவார் என்று முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ்க்கு 30 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு 30 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு இருப்பதாக அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் 99 விழுக்காடு பேர் எடப்பாடி பழனிசாமிக்கே ஆதரவு

ஓபிஎஸ் எத்தனை உயர்மட்ட குழு அமைத்தாலும் எடப்பாடியார் தான் ஒரே தலைவர். தமிழ்நாட்டில் 99 விழுக்காடு பேர் எடப்பாடி பழனிசாமிகே ஆதரவு என்று முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.

ஓபிஎஸ்ஸை ஓரங்கட்டும் எண்ணம் அதிமுகவுக்கு இல்லை

சசிகலாவை போல ஓபிஎஸ்ஸை ஓரங்கட்டும் எண்ணம் அதிமுகவுக்கு இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ்-ஈபிஎஸ் தனித்தனியாக ஆலோசனை

அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் ஜூன் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவரும் தங்களது ஆதரவாளர்களுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தினர்.

ஜெயலலிதா உடன் இருந்தவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும்

ஜெயலலிதா உடன் இருந்தவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்று தேனி மாவட்ட அதிமுக செயலாளர் சையது கான் தெரிவித்துள்ளார்.

Last Updated : Jun 20, 2022, 10:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.